பப்பாளி முதல் தர்ப்பூசணி வரை.. சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த 5 விதைகள்?
- Get link
- X
- Other Apps
குழந்தைகள் பழங்கள், காய்கறிகள் சாப்பிடும்போது தவறுதலாக விதையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் செடி முளைக்கும் என்று விளையாட்டாக கூறி பயமுறுத்துவர்.
நம்மில் பலருக்கும் வயிற்றுக்குள்ளிருந்து மரம் முளைத்துவரும் என்று பயந்த அனுபவமிருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழங்கள் சாப்பிடும்போது விதைகளை எடுத்துவிட்டு சாப்பிடுவதில் கவனமாக இருப்போம். ஆனால் நாம் சாப்பிட முடியாதவை என கருதும் சில விதைகள் ஆரோக்கியமானவை என்று நம்மில் பலருக்கும் தெரியாது.நிராகரிக்கக்கூடாத சில விதைகள்
பூசணி விதைகள்
பூசணி விதைகள் ஆரோக்கியமான ஒரு தீனி என்றே சொல்லலாம். இந்த விதைகளை சிறிது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
தர்பூசணி விதைகள்
நீர் சொட்ட சொட்ட இனிப்பான தர்பூசணியை சுவைக்கும்போது தெரியாமல் ஒரு விதையை சாப்பிட்டுவிட்டால் பழத்தின் சுவையையே இழந்ததுபோன்ற உணர்வு நம்மில் பலபேருக்கும் வந்திருக்கும். ஆனால் அந்த விதையில் புரதச்சத்து நிறைந்திருப்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மக்னீசியம் மற்றும் பிற சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
புளியங்கொட்டை
இந்தியாவில் பெரும்பாலான உணவுகளில் புளி பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள புளிப்புச்சுவை மற்றும் ஊட்டச்சத்துகள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் புளியங்கொட்டையும் சாப்பிடக்கூடியதுதான் என்று நமக்கு தெரியாது. புளியங்கொட்டைகள் இதய ஆரோக்யம் மற்றும் பற்கள் ஆரோக்யத்தை மேம்படுத்தும். மேலும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.
பப்பாளி விதைகள்
நாம் தூக்கியெறியும் விதைகளில் ஒன்றான பப்பாளி விதையின் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்திருக்கின்றன. நாள்பட்ட நோய்களுக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்னைக்கும் சிறந்த மருந்து. ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த பப்பாளி விதைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை.
சணல்(Hemp) விதைகள்
சணல் விதைகள் என்றாலே அதன் ஆரோக்யம் மீதான சந்தேகம்தான் மனதில் எழும். ஆனால், உண்மையில் சணல் விதைகளில் நிறைய சத்துகள் உள்ளன. இயற்கையாக கிடைக்கக்கூடிய புரதச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று இது. மேலும் இதயம் மற்றும் சருமம் சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
ALSO READ : மாறிவரும் உணவு பழக்கம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment