நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ கஸ்தூரி மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க......

 சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் பெரும் பங்கு வகிக்கின்றது.

முக அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த கஸ்தூரி மஞ்சள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்றே கூறலாம்.

முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள் போன்ற அனைத்து வகையான சருமம் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரேயொரு சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி மஞ்சள் ஆகத்தான் இருக்க முடியும்.

சாதாரண மஞ்சளுக்கு பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

அந்தவகையில் கஸ்தூரி மஞ்சளை எப்படி எதனுடனும் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 


  • வெறும் மஞ்சளை பூசாமல், அதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகிப்பது சிறந்தது.

  • கஸ்தூரி மஞ்சளை எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்த மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.

  • கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பருக்கள் தோன்றுவது தடைபடும். தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கமும் நீங்கும்.

  • கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

  • கஸ்தூரி மஞ்சள், பைத்த மாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். அப்படி கழுவினால் முகம் பொலிவாகும்.முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ்பேக் ஆகும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!