நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும் பழங்கள்

கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும்.
முத்துப்போன்ற வெள்ளை பற்களை கொண்டவர்கள் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் பற்களின் நிறம் மாறத்தொடங்கிவிடும். வேறு சில பல் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில உணவு பொருட்களை கொண்டு பற்களின் வெண்மை நிறத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்:

வாழைப்பழ தோல்: 
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதன் தோல்களுக்கு பற்களை வெண்மையாக்கும் சக்தி இருக்கிறது. தினமும் இரண்டு முறை வாழைப்பழ தோலை பற்களில் சில நிமிடங்கள் தேய்த்து வரலாம். அதில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்களால் உறிஞ்சப்படும். அவை வெண்மை நிறத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும். ஆரஞ்சு பழ தோலையும் பற்களில் தேய்த்து வரலாம்.

ஸ்ட்ராபெர்ரி: 
சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. காலையில் எழுந்ததும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பற்கள் மற்றும் ஈறுகளில் 2 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்து விடலாம். அதன் பிறகு பல் துலக்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்குவதற்கு உதவும். அதுபோல் ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் நார்ச்சத்து இயற்கை சுத்திகரிப்பானாக செயல்பட்டு பற்களை தூய்மையாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக வாய் மற்றும் பற்களில் படிந்திருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.

கேரட்: 
கேரட் கண்களுக்கு மட்டுமல்ல பற்களுக்கும் நலம் சேர்க்கும். தினமும் ஒரு கேரட்டை நன்றாக கடித்து மென்று சாப்பிட்டு வரலாம். அது பற்களில் படிந்திருக்கும் ‘பிளேக்’ எனப்படும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை வெளியேற்றச்செய்துவிடும். கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும். ஈறு நோய் மற்றும் ஈறு அழற்சியையும் தடுக்கும். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.

புகைப்பழக்கம்: 
புகைப்பழக்கம் பல்வேறு கொடிய நோய்களுக்கு காரணமாகிவிடும். புகைப்பழக்கத்தை தொடர்ந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதோடு பற்களும் மஞ்சள் நிறமாகிவிடும். முத்துப்போன்ற வெள்ளை பற்களை தக்கவைக்க விரும்புபவர்கள் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது அவசியமானது.

ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்:
சூடாகவோ அல்லது குளிராகவோ எதையும் பருகுவது பற்களுக்கு நல்லதல்ல. குளிர்பானங்கள் பருகும்போது ஸ்ட்ரா உபயோகிக்கலாம். காபி, டீயை கூட அப்படி பருகலாம். அது சூடான, குளிர்ச்சியான பானங்கள் பற்களுடனான நேரடி தொடர்பை குறைக்க வழிவகை செய்யும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!