Posts

Showing posts from January, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்.

Image
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்   பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முற்றுப்புள்ளி பட்ஜெட்டை தெரிந்து கொள்ள செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பட்ஜெட்டை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்ற ஏற்பாடு --------------------------------------------------- மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன் உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது - நிர்மலா சீதாராமன் ரூ.27 லட்சம் கோடி அளவிற்கு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பிரதமரின் தானியம் வழங்கும் திட்டம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் அளவிற்கு 3 ஆத்மநிர்பார் திட்டங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டன இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்தது

தோசை, சப்பாத்திக்கு அருமையான மீல்மேக்கர் கிரேவி.

Image
தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல்மேக்கர் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.                   மீல்மேக்கர் கிரேவி தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 100 கிராம்   சி.வெங்காயம் - 100 கிராம்   தக்காளி - 3   இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு   பச்சை மிளகாய் - 2   கடுகு - சிறிதளவு   பட்டை, கிராம்பு - சிறிதளவு   மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்   மஞ்சள் தூள் - சிறிதளவு   தேங்காய் துருவல் - கால் கப் கப் உப்பு, எண்ணெய் - தேவைக்கு கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மீல் மேக்கரை கொட்டி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் கால் மணி நேரம் ஆறவைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கி தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுதை சேர்த்து கிளறவும். வெங்காய கலவை பொன்

அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு.

Image
அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சண்டிகார், குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த 29-ந் தேதி, டெல்லி சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பதற்றம் நிலவுவதால், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் இணைய சேவை ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில், அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது.  இந்த மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இணைய சேவையோ, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையோ இருக்காது என்று மாநில அரசு கூறியுள்ளது. அமைதி சீர்குலைவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Also read :.  கரூர் அருகே: கிராமத்து இளைஞர்களுடன் பிரியாணி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்த ராகுல்காந்தி.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜஸ் மார்க்-2 விமானம் அடுத்த ஆண்டு அறிமுகம்.

Image
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் புதிய ரகம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், என எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் கூறியுள்ளார். புதுடெல்லி,  முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பன்முனை போர் விமானம், தேஜஸ் மார்க்-1ஏ. இதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேஜஸ் மார்க்-2 போர் விமானத்தை பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து வருகிறது.  இதுகுறித்து அதன் தலைவர் மாதவன் கூறுகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதவாக்கில் இந்த விமானம் அறிமுகம் செய்யப்படும். அதன் அதிவேக சோதனை, 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்படும். இந்த விமானம், சக்திவாய்ந்த என்ஜின்கள், பெரிய வடிவமைப்பு, அதிக சுமை தாங்கும் திறன், அடுத்த தலைமுறை மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் போன்ற சிறப்புகளை கொண்டது என்றார். Also read :   ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் இறந்த உடலை பிரீசரில் மறைத்து வைத்து பாதுகாத்து வந்த பெண்

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோர் மாயம் விவசாயிகள் அதிர்ச்சி தகவல்.

Image
டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புதுடெல்லி ,  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ந் தேதி அங்கு மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை மூண்டது. இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். எனவே இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது. இதைப்போல மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு செல்போன் எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இதற்கிடையே விவசாயிகளின் போராட்டக்களங்களில் பொதுமக்களை அனுமதிக்காத போலீசாரின் செயலுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து

அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி ரஷ்யா முழுவதும் ஆதரவாளர்கள் போராட்டம்.

Image
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதி ரஷ்யா திரும்பினார். அப்போது அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மாஸ்கோ விமான நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். அலெக்சியை உடனடியாக விடுவிக்கக்கோரி தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Also read :    பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு.

8கே உயர்தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் திட்டம்..!

Image
சீனாவில் 8k Ultra high definition எனப்படும் உயர்தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் முடிவு செய்துள்ளது. காட்சியை படம் பிடிப்பது, தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது என பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த சோதனை முயற்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வழிகாட்டியாக இது இருக்கும் என்றும் சீன ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. சீனாவின் 9 முக்கிய நகரங்களில் உள்ள 30 பெரிய அளவிலான திரை மானிட்டர்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Also read :   அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊகான் சந்தையை பார்வையிட்ட உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்.

Image
கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஊகான் கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரஸின் பாதிப்பு முதன் முதலாக சீனாவின் ஊகான் நகரில் கண்டறியப்பட்டது. இது குறித்த தகவல்களை சீனா திட்டமிட்டு மறைத்து விட்டதாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து, பலத்த எதிர்ப்புக்கு பின் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் ஊகான் சந்தையை பார்வையிட சீனா அனுமதித்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ஊகான் சந்தையில், விஞ்ஞானிகள் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். Also read :   இந்தியாவுடன் டிரம்ப் அரசு வகுத்த கொள்கையை பின்பற்ற ஜோ பைடன் அரசு முடிவு

திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி.

Image
திரையரங்குகளில் இன்று முதல் நூறு சதவீத இருக்கைகளையும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரையரங்குகளில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது உள்ளிட்டவை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க கட்டணங்களை பெறுவதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதி உட்பட திரையரங்குகளின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி வைக்க வேண்டும், இடைவேளைகளில் கூட்டமாக எழுந்து செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also read :  தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு.

2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொதுபட்ஜெட்... நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Image
2021 - 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் சலுகைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தற்போது தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை முழுவதும் காகிதமில்லா வகையில் டிஜிட்டல் பட்ஜெட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் நிதி நிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் நிதி நிலை அறிக்கையின் விபரங்கள் உடனுக்குடன் இணையதளத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதி நிலை அறிக்கையில், வருமான வரி தொடர்பான சலுகை இருக்குமா என அனைத்து தரப

பிரதமர் மோடி வரும் பிப்.14 ஆம் தேதி தமிழகம் வருகை

Image
பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகம் வருகை. சென்னை ,  பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். மெட்ரோ ரெயில் விரிவாக்கம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.   சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை  அதிமுக - பாஜக இணைந்து சந்திக்கும் என  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று அறிவித்து இருந்தது நினைவு கூரத்தக்கது. Also read.   ஆண் நண்பர் இல்லையென்றால் கல்லூரிக்கு வரக்கூடாது.. அதிர்ச்சி அடைந்த மாணவிகள்

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

Image
நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன. காத்மண்டு, உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை தாக்கி வரும் சூழலில், சமீப காலங்களாக பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.  இவற்றில் இந்தியாவில் 9 மாநிலங்களில் இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதுபற்றி அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடை வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தலைநகர் காத்மண்டுவில் தர்கேஷ்வர் நகராட்சி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன.  542 முட்டைகள் மற்றும் 75 கிலோ கோழி தீவனம் ஆகியவையும் அழிக்கப்பட்டன.  பறவை பண்ணையில் நடந்த பி.சி.ஆர். பரிசோதனை அடிப்படையில் தொற்று உறுதியானது என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, பண்ணை பறவைகளிடையே சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் முரணாக தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பண்ணை முதலாளிகள்

அர்ஜெண்டினாவில் கோடீஸ்வர்களுக்கு சிறப்பு வரி விதிப்பு.

Image
அர்ஜெண்டினாவில் கோடீஸ்வரர்களுக்கான சிறப்பு வரியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புவெனஸ்ஐரிஸ் , தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே அரசு திணறி வருகிறது. மேலும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனை சீர்செய்வதற்காக அர்ஜென்டினாவில் கோடீஸ்வரர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி அர்ஜெண்டினாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 சதவீத வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரியும் செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது அர்ஜெண்டினாவில் அமலுக்கு வந்து இருக்கிறது. Also read :   இந்தியாவ

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா?

Image
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. மீண்டும் சூடுபடுத்தப்பட்ட பழைய உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம். வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பழமையான உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் (Health) மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.  முட்டை -  முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் (Egg) புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கு-  உருளைக்க

கரூர் அருகே: கிராமத்து இளைஞர்களுடன் பிரியாணி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்த ராகுல்காந்தி.

Image
கரூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல்காந்தி கிராமத்து இளைஞர்களுடன் இணைந்து சமையல் செய்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர் : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல் மிக எளிமையாக பொதுமக்களை அணுகி சந்தித்து பேசினார்.  மேலும் பேக்கரி கடைகளில் டீ குடித்தார். இதுபோல ஒரு காட்டுப்பகுதிக்கு சென்ற அவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கை தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்த

தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு.

Image
தமிழகத்தில் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, மேலும் பல புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, வருகிற 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கான விடுதிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளைநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவீத இருக்

இலவசம் & பணம்

Image
Also read :   நீங்க செய்யும் வேலை கடினமானது என நினைத்தால் இந்த வீடியோவை பாருங்க!

சாதம் வடி நீர், நீர்த் தண்ணீர்… இப்படி தயார் செய்யுங்க; உடல் எடையைக் குறையுங்க!

Image
சோறு சாப்பிடுவதால் 650 - 1000 கலோரிகள் அதிகரிக்கும். அதேசமயம் கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும். சாதம் வடி நீர் ஒரு அற்புத பானம். சாதம் வெந்ததும், நீரை வடித்து அதனுடன் உப்பு, மிளகு தூள் கலந்து அருகலாம். இதுவே சாதம் வடி நீர் அல்லது கஞ்சி தண்ணீர். தவிர, வடி சாதம் ஆறிய பிறகு அதனுடன் வடிநீர் மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து விடுவார்கள். மறுநாள் அது பழைய சோறுடன் கலந்த தண்ணீராக இருக்கும். அதன் டேஸ்டே தனி! உப்பு போட்ட இந்த ‘நீர்த்தண்ணீர்’ருக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சாதம் வடிநீருக்காகவும், நீர்த்தண்ணீருக்காகவும் குக்கரை தவிர்ப்பவர்களும் உண்டு. இந்த வடி சாதம் தயார் செய்வதும்கூட கலைதான். இதிலும் நீங்கள் விருப்பம் போல தண்ணீரை அதிகமாக சேர்த்தால், சாதத்தின் சுவை பாதிக்கும். சாதம் வடி நீர் தமிழ் வீடியோ ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். சாதம் வடிநீர் அற்புதமான பலன்களைக்

பிசியான சாலையில் லேண்ட் குரூசர் காரை அசால்ட்டாக ஓட்டி சென்ற 5 வயது சிறுவன் - வைரல் வீடியோ

Image
இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஊடங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் குரூசர் காரை வேறு ஒருவரின் உதவியின்றி ஓட்டி செல்கிறான். இந்த வீடியோவை பார்த்த பலரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானின் முல்தான் நகரில் பரபரப்பான சாலையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 27 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் கார் ஓட்டுவது எப்படி சாத்தியம் என்று பலரும் குழம்பி உள்ளனர். அந்த சிறுவனின் உயரத்திற்கு எப்படி பெடல் எட்டிருக்கும் என்பது தான் அனைவரின் சந்தேகமாக உள்ளது. இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போசன் சாலையில் பணியிலிருந்து போக்குவரத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதை தொடர்ந்து சிறுவன் கார் ஓட்டிய சிசிடிவி காட்சிகள், வாகனத்தின் எண் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம

இந்தியாவுடன் டிரம்ப் அரசு வகுத்த கொள்கையை பின்பற்ற ஜோ பைடன் அரசு முடிவு.

Image
இந்தியா உள்ளிட்ட இந்தோ - பசிபிக் நாடுகளுடனான உறவு தொடரும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசின் கொள்கைகளை தொடர உள்ளதாகவும் அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறியள்ளார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, 'குவாட்' எனப்படும் கூட்டமைப்பு, 2017ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கூட்டமைப்பு, போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு துறைகளிலும், இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Also read :  அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதம்.

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Image
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் போலியோ சொட்டு மருத்து முகாமை தொடங்கி வைத்தார். Also read :   அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்.

Image
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர்் Also read:.   இந்தியா அனுப்பிய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை - இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்.

முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Image
சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப் பொருள் வெந்தயம். உணவில் வெந்தயத்தைப் பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டை தணிக்க, இதயத்தைப் பாதுகாக்க, உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க என பயன்கள் ஏராளம்.  எனினும் சமையலில் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்குப் பதிலாக முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட கூடுதல் பலன் கிடைக்கும். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் புரதச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன.  முளைக்கட்டுவது எப்படி?  வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளைகட்டியிருக்கும். வெந்தயத்தை நேரடியாக உணவுப்பொருளில் சேர்த்தால் கசப்பாக இருக்கும். ஆனால், முளைக்கட்டி சாப்பிட்டால் கசப்பு சுவையே தெரியாது.  பயன்கள் ► நீரழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. 3 மாதங்கள் தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் இன

மசினகுடி ரிசார்ட்கள் போடும் மந்திரங்கள்...சீல் வைக்க சென்று இரக்கம் காட்டிய அதிகாரிகள்!

Image
மசினகுடியில் யானை மீது தீ மூட்டிய சம்பவத்தில், ரிசார்ட்களுக்கு சீல் வைக்கச் சென்ற அதிகாரிகள் உரிமையாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு திரும்பினர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள மசினகுடியில் 40 வயதான ஆண் யானை தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பின்னர், அந்த யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இறந்தும் போனது. இது தொடர்பாக பிரசாத் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரிக்கி ராயன் என்பவரைத் தேடி வருகின்றனர். இன்று வரை ரிக்கி ராயன் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலரான யானை ராஜேந்திரன் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அனுமதியின்றி சொகுசு விடுதி கட்டும் போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருந்த கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கையை இரண்டு வாரத்தில் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின

தொடங்கியது மூங்கில் அரிசி சீசன்: விலை கிலோ ரூ.500 ; பழங்குடியின மக்கள் உற்சாகம்!

Image
கூடலூரில் 50 வருடங்களான மூங்கில் மரங்களில் இருந்து கிடைக்கும் மூங்கில் அரிசி சீசன் தொடங்கியுள்ளது. பழங்குடியின மக்கள் அவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர், முதுமலை பகுதியிகளில் சாலையோரத்தில் ஏராளமான மூங்கில் காடுகள் உள்ளன. யானைகளுக்கு இந்த மூங்கில் மரங்கள் பிடித்த உணவு. மூங்கில் மரங்களின் இலைகள், அதன் தண்டுப்பகுதிகளை யானைகள் விரும்பி உண்ணும். சுமார் 50 ஆண்டு வயது கொண்ட மூங்கில் மரங்களில் இருந்து மருத்துவ குணங்கள் கொண்ட மூங்கில் அரிசி கிடைக்க தொடங்கியுள்ளது. மூங்கில் அரிசி நாம் அன்றாடம் சாப்பிடும் நெல் அரிசி போலவே இருக்கும். பழங்குடி மக்களின் முக்கிய உணவு இந்த மூங்கில் அரிசிதான். உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அள்ளி வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும். மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது. அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ணக் கூடியது. நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே இந்த

அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு.

Image
இந்திய குடிமக்கள் யாவருக்கும் விசா வழங்கும் நடவடிக்கையை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது. மாணவர்கள் விசா உள்பட அனைத்து வகை விசாக்களும் வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கவும் ரஷ்யா கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கும் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கும் தற்போது வாரம் இருமுறை விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. விசாவுக்கு விண்ணப்பம் செய்வோர் தேவையான ஆவணங்களை ரஷ்ய தூதரக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அத்துடன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெற்றும் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Also read :   பறக்கும் கார்களைக் கொண்ட விமானநிலையம் அமைக்க இங்கிலாந்து முடிவு..!

இந்தியா அனுப்பிய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை - இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்.

Image
இலங்கைக்கு இந்தியா அனுப்பிய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை நன்கொடையாக வழங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு கடந்த இரு தினங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நன்றி தெரிவித்து உள்ளார். Also read :    உலக அளவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூசிலாந்துக்கு முதலிடம்.

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்.

Image
கொரோனா காலத்திற்கு பிறகு முழு அளவிலான நாட்டின் பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் இருந்து இந்த நிதியாண்டின் பட்ஜெட் வித்தியாசமானது. கொரோனா பாதித்த நிலையில் எட்டு மாதங்களுக்கும் மேலாக நாடு மிகப்பெரிய ஊரடங்கை சந்தித்த பின் தாக்கல் செய்யப்படுவதால், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் வழக்கமான தனி நபர் மாத ஊதியத்துடன் தொழில் வருவாயைத் தனியாகப் பிரிப்பதில் நிதியமைச்சகத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் ஊதியத்தில் பிடித்தத்தை அதிகரித்து பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய அரசு முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. மாதாந்திர ஊதியம் பெறுவோருக்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கார்ப்பரேசன் வரி குறைப்பு ,காப்பீடு திட்டங்கள் அறிவிப்பு என பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த

அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதம்.

Image
மகாத்மா காந்தியின் 74வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவின் டேவிஸ் நகரில் அமைந்துள்ள பூங்காவில் 6 அடி உயரத்தில் காந்தியின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலையின் முகம் மற்றும் கால் பகுதி அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து காந்தியின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.  Also read :   மகாத்மா காந்தியின் கொள்கைகள் உத்வேகம் அளிக்கும்- பிரதமர் மோடி

தமிழகத்தில் நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

Image
  தமிழகத்தில் முன் களப்பணியாளர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், வெண்டிலேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்ட 25 படுக்கைகள் கொண்ட புதிய வார்டை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். Also read :   இராணுவத்தில் பெண்களுக்கு ponytail, lipstick அனுமதி: US Army அதிரடி அறிவிப்பு

5ஜி இணைய சேவையை செய்து காட்டிய ஏர்டெல்: இந்தியா வருகிறதா 5ஜி?

Image
ரோபோக்கள், சென்சார்கள் உள்ளிட்டவை 5ஜி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை வசதியை, ஹைதராபாத் நகரத்தில் செயல் விளக்கமளித்துக் காட்டி இருப்பதாக தன் வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறது. டைனமிக் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் மூலம், முதல் முறையாக, ஒரே அலைக்கற்றை தொகுப்புக்குள் (Spectrum Block) நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை சேவைகளை தடையின்றி வழங்கியுள்ளதாக ஏர்டெல் கூறுகிறது. சரி 5G என்றால் என்ன? சுருக்கமாக 5G என்பது அடுத்த தலைமுறை மொபைல் இணைய சேவை. தற்போது இருக்கும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை (upload & download speed) விட கூடுதல் வேகத்தில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ரேடியோ அலைவரிசையை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை மொபைல் இணையத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியும். 5G வந்தால் என்ன பயன்? இந்த அதிவேக இணையம் நடைமுறைக்கு வந்தால், நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிணாமத்தில், நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் இணைப

ஆண் நண்பர் இல்லையென்றால் கல்லூரிக்கு வரக்கூடாது.. அதிர்ச்சி அடைந்த மாணவிகள்..

Image
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது. அதில், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்றும், இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், இந்த விஷயத்தை கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். அதன்பிறகே, இது போலியாக வலம் வரும் நோட்டீஸ் என்றும், கல்லூரியின் பெயரை குலைப்பதற்கு செய்யப்பட்ட சதி என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த நோட்டீசை புறக்கணிக்குமாறும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது என்னப்பா புது பிரச்சனை... கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

Image
                கொரோனா வைரஸ் கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த நாளங்களில் ரத்தம் உறையும். இதனால் இதயம் செயலிழக்கும் என்று தான் கேள்விப்பட்டோம். இப்போது ஒரு புது பிரச்சனை... கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 ஆரோக்கியமான ஆண்களுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். கொரோனா பாதித்த ஆண்களின் விந்த

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்