நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் “ இட்லி உப்புமா “.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் “ இட்லி உப்புமா “. உப்புமா என்றாலே பலருக்கு கண்டிப்பாக பிடிக்காதுன்னு தான் ஆனா இட்லி உப்புமா பற்றி கேட்கவே வேண்டம்.

இட்லி உப்புமா நம் வீட்டில் செய்யும் இட்லியை வைத்தே செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான ஒரு ஈவினிங் ஃபுட். இது செய்வது ரொம்ப ஈஸி.

தேவையான பொரு‌ட்க‌ள்

இ‌ட்‌லி – 10

வெ‌ங்காய‌ம் – 2

ப‌ச்சை ‌மிளகா‌ய் – 2

கடுகு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு, எ‌ண்ணெ‌ய் – தா‌ளி‌க்க

ம‌ஞ்ச‌ள் பொடி – அரை ‌சி‌ட்டிகை

உ‌ப்பு – ‌சி‌றிதளவு

செ‌ய்யு‌ம் முறை

இட்லியை ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் போ‌ட்டு எடு‌த்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனா‌ல் இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.

வெங்காய‌த்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ப‌ச்சை ‌மிளகாயை ‌கீ‌றி ‌விடு‌ங்க‌ள்.

வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, க‌றிவேப்பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து, பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவு‌ம்.
உதிர்த்த இட்லியை போட்டு, சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டுங்கள்.

சுவையான இட்லி உப்புமா தயார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்