நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

53 வயதில் தனது மெய்க்காப்பாளரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை 
Pamela Anderson தனது மெய்க்காப்பாளர் Dan Hayhurst ஐ 5- வதாக ரகசிய திருமணம் முடித்து, புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.
53 வயதான Pamela Anderson ஏற்கனவே, 4 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார்.

இவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்