நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Health News: நாம் தினமும் குடிக்கும் தேநீரில் இத்தனை அபூர்வ விஷயங்களா!!

 உலகம் முழுவதிலும் பரவலாக விரும்பி பருகப்படும் பானம் தண்ணீர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவது இடத்தில் இருப்பதும் சிறிதும் சளைத்தது அல்ல. ஆம்!! தண்ணீருக்குப் பிறகு அதிக மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் தேநீராகும். தேநீரின் வித்தியாசமான சுவை மற்றும் பல நன்மைகள் காரணமாக, இது உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக உள்ளது..


தேநீரால் பல ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits) ஏற்படுகின்றன. நமக்கு உடல் சோர்வாக இருந்தாலோ, மனம் சோர்வுற்றாலோ, மனநிலையை மாற்றவோ, பொழுது போகவில்லை என்றாலோ, நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போதோ, இப்படி அனைத்து சந்தர்பங்காளிலும் தேநீர் நமக்கு அருதுணியயாக இருக்கும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் தயாரிக்கப்படுகின்றன. உண்மையில் பப்பில் தேநீர், ஷாமோமில் தேநீர், கிரீன் டீ (Green Tea), உலாங் தேநீர், ஐஸ் தேநீர், இனிப்பு தேநீர், மூலிகை தேநீர் என இதில் பல வகைகள் உள்ளன. தேநீர் பற்றிய இன்னும் சில சுவாரசியமான விஷயங்களை இங்கே காணலாம்.


'டா-ஹாங் பாவோ' என்பதுதான் உலகின் மிக விலையுயர்ந்த தேநீரின் பெயர். இந்த தேநீரின் ஒரு கிலோ விலை சுமார் 8 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தேநீர் மிக சிறந்த, வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரின் இலைகள் சீனாவின் புஜியனில் உள்ள வுய் மலைகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.

உலகம் முழுவதும் பல தேநீர் (Tea) பிராண்டுகள் உள்ளன. ஆனால் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் தேநீர் பிராண்ட் எது என்று உங்களுக்குத் தெரியுமா? லிப்டன் தேநீர் தான் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். லிப்டனின் பாட்டில் தேநீர் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.


1904 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் முதல் முறையாக தேநீரை ருசித்தார்கள். செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியின் போது, ​​ஒரு நபர் தனது பண்ணையில் பயிரிடப்பட்ட தேயிலை மாதிரிகளை வைத்தார். இதற்குப் பிறகு, அதே நபர் தனது தேநீரில் பனியைப் பயன்படுத்தி ஐஸ் டீ தயாரித்திருந்தார்.

திபெத்திய (Tibet) மக்கள் தேநீரில் வெண்ணெயை போடுகிறார்கள். ஆம்!! ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதனால் அந்த தேநீரின் மணமும், ருசியும், குணமும் மேம்படுகின்றன. இங்குள்ள மக்கள் தேநீரின் சக்தி மற்றும் கலோரிகளை அதிகரிக்க வெண்ணெய் சேர்த்து தேநீரை தயாரிக்கிறார்கள். இது பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், இந்த தேநீர் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகிறது.

நம்மில் பலர் டேசோகிராஃபி பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தேயிலை இலைகள் பற்றிய தகவல்களை அளிப்பது அல்லது டீ ரீடிங்கை டேசோகிராஃபி என கூறுவார்கள். தேயிலைகளின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது கொசுக்களை (Mosquito) தூர ஓட்டுகிறது. பூச்சிகளை ஓட்டவும் நாம் தேநீர் பைகள் அல்லது தேநீர் வாசத்தை பயன்படுத்தலாம்.


வெயிலால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க தேயிலை பயன்படுத்தப்படுகிறது. தேநீரில் உள்ள டானின் உடலில் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.


ALSO READ:   கையேந்திபவன் கார தோசை.. இதுல தான் அந்த ரகசியமே இருக்கு!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!