நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைக்கும் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!

 ரோஸா என்ற பெண் ஒருவருக்கு, அந்த அப்பார்ட்மென்டில் வசிப்பவர் ஒருவரே, தங்கள் அபார்ட்மென்டிலேயே கிப்ட்டாக, வீடு ஒன்றை லீசுக்கு வழங்கி உள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!


ரோஸா என்ற பெண் ஒருவருக்கு, அந்த அப்பார்ட்மென்டில் வசிப்பவர் ஒருவரே, தங்கள் அபார்ட்மென்டிலேயே கிப்ட்டாக, வீடு ஒன்றை லீசுக்கு வழங்கி உள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!


இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில்,  வீடு துடைத்த ரோஸா என்ற பெண் ஒருவருக்கு, அந்த அப்பார்ட்மென்டில் வசிப்பவர் ஒருவரே, தங்கள் அபார்ட்மென்டிலேயே கிப்ட்டாக, வீடு ஒன்றை லீசுக்கு வழங்கி உள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் (Coronavirus) உலகில் உள்ள அனைவருக்கும் 2020 கடுமையான காலமாக மாறியது. வைரஸ் பரவல் காரணமாக பலர் வேலை இழந்தனர். இதன் விளைவாக, அவர்கள் கடுமையான நிதி சிக்கல்களில் சிக்கி கொண்டனர். ஆனால், இதுபோன்ற காலங்களில்தான் மிகவும் அன்பான மற்றும் இதயத்தை இளக்கும் மற்றொரு பக்கத்தை உலகம் கண்டது. அப்படி சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி (Viral Video) உள்ளது. அதில் நியூயார்க்கில் ஆடம்பரமான கட்டிடத்தில் ஒரு துப்புரவாளர் ஒரு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ரெடிட் (Reddit) வலைதளத்தில் முதலில் பகிரப்பட்ட வீடியோ வைரலானதுடன், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் லிப்ட்டில் பயணிக்கும் ஒருவர், அருகில் இருக்கும் பெண் குறித்து பேப்பர் கார்டாக காட்டுகிறார். அதில், அந்த பெண்ணின் பெயர் ரோஸா. 20 ஆண்டுகளாக அபார்ட்மென்டில் (apartment) துப்புறவாளராக பணியாற்றுகிறார். இருப்பினும் கொரோனா பரவலின் போது அவர் வேலை பறிபோய் உள்ளது. அங்கு வசிப்பவர்களை அவரை மிகவும் நேசிப்பதாகவும், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அந்த பேப்பர் கார்டில் எழுதப்பட்டிருந்தது.

லிப்ட் நின்றதும் துப்புறவு உபகரணங்களை தனது தோலில் தூக்கி செல்லும் ரோஸா (Rosa), தனக்கு தான் அந்த பரிசு என தெரியாமல், வீடு துடைக்க அழைத்து செல்லப்படுவதாக நினைத்து கொள்கிறார். குறிப்பிட்ட அந்த வீட்டை அடைந்ததும், அந்த வீட்டின் அழகை கண்டு ரசிக்கிறார். அந்த அபார்ட்மென்ட்டில் (apartment) நான்கு அறைகள் மற்றும் மூன்று குளியலறைகள் மற்றும் ஒரு மொட்டை மாடி உள்ளது. இதனை கண்டு ஆச்சரியத்தில் இருக்கும் போதே, அடுத்த இரண்டு ஆண்டுகள் இது உங்களுக்கு தான் சொந்தம் என கிப்ட் அளிக்கும் நபர் கூறுகிறார். லீஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு வீட்டின் சாவியை எடுத்துக் கொள்வது மட்டும் தான் உங்கள் வேலை என அவரிடம் கூறுகிறார்.

மற்றொருவர், கடந்த 20 ஆண்டுகளாக விஸ்வாசமாக பணியாற்றியதற்காக எங்களின் நன்றியுணர்வு என கூற, ‘‘ஓ மை காட்.. இதனை நம்ப முடியவில்லை’’ என்ற அழுதவாறு கூறக்கொணடே ஆனந்த கண்ணீர் விடுக்கிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்களும் உருகுகின்றனர்.


ALSO READ  :  53 வயதில் தனது மெய்க்காப்பாளரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்