இராணுவத்தில் பெண்களுக்கு ponytail, lipstick அனுமதி: US Army அதிரடி அறிவிப்பு
- Get link
- X
- Other Apps
அமெரிக்க இராணுவத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது.
பணியாளர்களுக்கான இராணுவ துணைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் கேரி பிரிட்டோ கூறுகையில், "முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண்பதற்கான எங்கள் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். பின்னர் அனைத்து படையினரும் இராணுவத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக இருப்பதை உணருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் கொள்கைகளை செயல்படுத்துகிறோம்."
"எங்கள் அணிகளுக்குள் அனைவரையும் உள்ளடக்கி அழைத்துச் செல்வது மற்றும் சமத்துவம் என்று வரும்போது செயல்கள் சொற்களை விட சத்தமாக பேசுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இன்று நாங்கள் அறிவித்த மாற்றங்கள் நம் மக்களுக்கு முதலிடம் கொடுக்கும் கொள்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
படத்தில்: அமெரிக்க இராணுவம் சீர்ப்படுத்தும் தரநிலைகள் மற்றும் AR 670-1
இராணுவத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் (Social Media) கலவையான பின்னூட்டங்களைப் பெற்றது. பலர் இந்த நடவடிகையை பாராட்டினர். சிலர் இதை கிண்டலும் செய்தனர்.
சேவையில் உள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் கூந்தலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அமெரிக்க விமானப்படை தனது விதிகளை மாற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) திங்களன்று ஒரு உயர்நிலை ஆணையில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான, அவருக்கு முந்தைய அதிபரால் விதிக்கபட்ட, சர்ச்சைக்குரிய தடையை ரத்து செய்தது. இது எல்.ஜி.பீ.டி.கியூ ஆதரவாளர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றையும் ஜோ பைடன் பூர்த்தி செய்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் உடனிருக்கையில் பைடன் ஓவல் அலுவலகத்தில் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதில் கையெழுத்திட்ட பிறகு, "இது ஒரு எளிய விஷயம். சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அந்த சேவையை வெளிப்படையாகவும் பெருமையுடனும் செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பான நாடாகிறது” என்று பைடன் ட்விட்டரில் கூறினார்.
ALSO READ : காபூலில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கடந்து ஹிப் ஹாப் நடனத்தில் இளம்பெண் அசத்தல்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment