நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு.

தமிழகத்தில் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, மேலும் பல புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருகிற 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கான விடுதிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளைநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி பிப்ரவரி 1-ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் ஆகியவைகள் அனுமதிக்கப்படுகின்றன. கிரிக்கெட் உட்பட விளையாட்டு நிகழ்ச்சிகளை 50% பார்வையாளர்களுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உள்ளரங்கங்களில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை அதிகபட்சமாக 600 பேருடன் நடத்திக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அதேசமயம், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!