நல்ல நட்பு
- Get link
- X
- Other Apps
நல்ல நட்பு
ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் கோலா கரடி, கங்காரு இடையே உருவாகியுள்ள நட்பு பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது. பொதுவாக, வெவ்வேறு விலங்கினங்கள், தோழமை கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கோலா கரடியும், கங்காரு குட்டியும் ஒன்றோடு ஒன்று தழுவி நட்புறவு கொள்ளும் காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
துரத்தி வந்த கரடி
ருமேனியாவின், பிரிடீல் ஸ்கி ரெசார்ட் பகுதியில், இளைஞர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு கரடி அவரை துரத்த ஆரம்பித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர், வேகமாக சறுக்கியபடி அங்கிருந்து உயிர் தப்பினார். இந்த பதைபதைக்கும் காட்சிகளை மற்றொரு பனிச்சறுக்கு வீரர், தன் மொபைல் போனில் படம் பிடித்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் தங்களது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இது அல்லவா பாசம்
இளைஞர் ஒருவர், ஷாப்பிங் செய்வதற்காக தனது செல்லப்பிராணியுடன் மால் ஒன்றுக்கு செல்கிறார். மிகப்பெரிய அந்த மாலில், இரண்டாம் தளத்துக்கு செல்வதற்காக எக்ஸ்கலேட்டரில் ஏற முயன்றார். அதை பார்த்த நாயோ பயந்து நடுங்கி ஏறமாட்டேன் என்பது போல அடம்பிடிக்கிறது. எவ்வளவோ சமாதானபடுத்தி இழுத்து பார்த்தும், நாய் வருவதாக இல்லை. பின்னர், இளைஞர் குழந்தையை போல நாயை துாக்கி வைத்துக் கொண்டு எக்ஸ்கலேட்டரில் ஏறுகிறார். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை தொட்டியில் குரங்கு
குட்டி குரங்கு ஒன்று, தனக்கு வைத்த வாழைப்பழத்தை சாப்பிடாமல் வீட்டிற்குள் குறும்பு செய்து கொண்டிருக்கிறது. பின்னர், வாழைப்பழம் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியின் மேல் ஏறி நிற்கிறது. தொடர்ந்து உள்ளே என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக, அதில் இறங்குகிறது. அடுத்த நொடியே குப்பைதொட்டி மூடிக்கொள்ள, அதிர்ந்து போன குரங்கு குட்டி, கூச்சலிட்டபடி வெளியேறி ஓடுகிறது. இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ : ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment