நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருவிழா கோலாகலம்..!

தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, திரளான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூசம்... 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக விளங்கும் பூச நட்சத்திரம், தைமாதத்தில் வரும்போது அதனை தைப்பூசமாகக் கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் நிறைமதி நாளில் வரும் இந்த நன்நாளில்தான் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு திரளான பாதயாத்திரை வருகின்றனர். மயில் காவடி, மச்சக்காவடி, பால்காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி ஏந்திய பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே... உள்ளம் ஒன்றி வழிபடுவோருக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே... திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே... நம்பினோரைக் கரை சேர்த்திடும் நாயகனே... என பக்தர்கள் மனமுருக குமரனை வணங்கிப் போற்றுகின்றனர் இந்நாளில்...!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!