நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிசியான சாலையில் லேண்ட் குரூசர் காரை அசால்ட்டாக ஓட்டி சென்ற 5 வயது சிறுவன் - வைரல் வீடியோ

இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக ஊடங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் குரூசர் காரை வேறு ஒருவரின் உதவியின்றி ஓட்டி செல்கிறான். இந்த வீடியோவை பார்த்த பலரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தானின் முல்தான் நகரில் பரபரப்பான சாலையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 27 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் கார் ஓட்டுவது எப்படி சாத்தியம் என்று பலரும் குழம்பி உள்ளனர். அந்த சிறுவனின் உயரத்திற்கு எப்படி பெடல் எட்டிருக்கும் என்பது தான் அனைவரின் சந்தேகமாக உள்ளது.

இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போசன் சாலையில் பணியிலிருந்து போக்குவரத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து சிறுவன் கார் ஓட்டிய சிசிடிவி காட்சிகள், வாகனத்தின் எண் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்