நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு.

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

லாகூர், 

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட, கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற அந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக, அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன என சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்களைக் கவனிக்கும் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் அமீர் ஹஸ்மி நேற்று தெரிவித்தார். அந்த கோவிலின் நிர்வாகம், ஓர் உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவிலும் அடங்கும் என்று அமீர் ஹஸ்மி கூறினார். பெஷாவரில் உள்ள இந்து கோவில்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தினராக இந்துக்கள் உள்ளனர். அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!