நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அர்ஜெண்டினாவில் கோடீஸ்வர்களுக்கு சிறப்பு வரி விதிப்பு.

அர்ஜெண்டினாவில் கோடீஸ்வரர்களுக்கான சிறப்பு வரியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
புவெனஸ்ஐரிஸ்,

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே அரசு திணறி வருகிறது. மேலும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதனை சீர்செய்வதற்காக அர்ஜென்டினாவில் கோடீஸ்வரர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி அர்ஜெண்டினாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 சதவீத வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரியும் செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது அர்ஜெண்டினாவில் அமலுக்கு வந்து இருக்கிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!