'குட்பை' சொல்லிவிடுமா 'கூகுள்?'
- Get link
- X
- Other Apps
கூகுள், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள்,ஊடகங்களின் செய்திகளை பயன்படுத்துவதால், அவற்றுக்கு ராயல்டி தொகை வழங்க வேண்டும் என்கிறது, இந்த புதிய சட்டம்.ஆனால் இதை கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன. கூகுள் ஒருபடி மேலே போய், 'ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிவிடுவோம்' என சொல்லி இருக்கிறது. ஆஸ்திரேலியாவோ, சட்டத்தை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது.
செய்திகளைப் படிக்க விரும்பும் மக்கள் மூலம், தங்களுக்கான வாடிக்கையாளர்களை, கூகுள் போன்ற நிறுவனங்கள் பெறுகின்றன. எனவே அவை ஒரு குறிப்பிட்ட தொகையை, ஊடகத் துறைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறது, ஆஸ்திரேலிய அரசு.ஆஸ்திரேலிய அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய், கிட்டத்தட்ட, 75 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்கள்எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலிய அரசு இத்தகைய சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, 90 - 95 சதவீதம் பேர் கூகுள் தேடுபொறியையே அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால், கூகுள் அந்நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோம் என்கிறது.இவ்விவகாரத்தில், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய, உலக நாடுகள் அனைத்துமே காத்துக்கொண்டிருக்கின்றன.
AKSO READ : தென் ஆப்ரிக்கா முன்னால் அதிபர் திரு நெல்சன் மண்டேலா கூறியதாவது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment