நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உத்தர பிரதேசத்தில் முந்தி சென்ற வாகனங்கள் மோதி விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.

உத்தர பிரதேசத்தில் முந்தி செல்லும்பொழுது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில், பேருந்தும், லாரி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள் என முதற்கட்ட தகவல் வெளியானது.  இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்த நபர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் கூறும்பொழுது, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.  10 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின் வந்த தடயவியல் குழு தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.  மீட்பு பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.  3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டுள்ளன.

இந்த விபத்து பற்றி சம்பவம் நடந்தபொழுது அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறும்பொழுது, வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்றன.  இதில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்