நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருமண மெனுவில் Maggie: Viral ஆன போஸ்ட், வாழ்த்திய Netizens

 


தொற்றுநோயின் காரணமாக உலகம் முழுதும், திருமணங்களில் விருந்தினர் பட்டியல் குறைந்துள்ளது. விருந்தின் மெனுவும் வெகுவாக மாறியுள்ளது.


Maggi சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? அனைத்து உள்ளங்களையும் ஒன்றிணைக்கும் பல விஷயங்களில் Maggi-யும் ஒன்றாகும். இப்போது மேகி பிரியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. திருமண உணவு மெனு பட்டியலில் Maggi நுழைந்துள்ளது. ஆம்!! அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

தொற்றுநோயின் (Pandemic) காரணமாக உலகம் முழுதும், திருமணங்களில் விருந்தினர் பட்டியல் குறைந்துள்ளது. விருந்தின் மெனுவும் வெகுவாக மாறியுள்ளது. லாக்டௌனில் தங்களின் பிரியமான உணவுகளாக மாறிப்போன பலவித உணவுகளை மக்கள் தங்கள் திருமண மெனுவில் சேர்த்து வருகின்றனர். இதில் Maggie-யும் சேர்ந்துள்ளது.

சமீபத்திய ​​ஒரு திருமணத்தில், ஒரு மேகி உணவு கவுண்டரின் படத்தைப் பார்த்த நெட்டிசன்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. 2 நிமிடத்தில் தயார் செய்யப்படும் இந்த ருசியான நூடுல்சை யாரால் தான் பாராட்டாமல் இருக்க முடியும்? இந்த படத்தை சௌம்யா லக்கானி என்ற பத்திரிகையாளர் தனது உறவினரின் திருமண வரவேற்பின் போது எடுத்தார். பின்னர் அவர் இதை தனது ட்விட்டர் (Twitter) அகௌண்டில் பகிர்ந்தார்.


"உணவு மெனுவைப் பொறுத்தவரை இப்படி வித்தியாசமாக யோசித்ததற்காக நான் என் உறவினரை மிகவும் பாராட்டுகிறேன். தனது திருமணத்தில் ஒரு மேகி கவுண்டர் இருப்பதை அவர் உறுதி செய்தார்” என்ற தலைப்புடன் அவர் புகைபப்டத்தைப் பகிர்ந்துள்ளார். வைரல் ஆன இந்த புகைப்படத்தில், பல மேகி பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் மேகியை சமைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.


புகைப்படத்துடன் பகிரப்பட்ட அந்த ட்வீட் சில நிமிடங்களில் வைரலாகி (Viral) ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்றுள்ளது.


ALSO READ :   துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்