நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்.

 
உலகில் முதல்முறையாக விண்வெளியில் மனிதர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்கா பிறப்பித்துள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார்.

இந்த சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. 

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!