நம்நாட்டு கொரோனா மருந்துக்கு கடும் கிராக்கி: மோடிக்கு சேருகிறது உலக அளவிலான புகழ்.
- Get link
- X
- Other Apps
கொரோனா காலத்தில் மிகச்சாதுர்யமாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியதோடு, குறுகிய காலத்தில் நோய் தடுப்பு மருந்தை கண்டறிந்து பல நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உலக அரங்கில் நன்மதிப்பை பெற்றுள்ளார் நம் பிரதமர்,'' என்று பா.ஜ., துணைத்தலைவர் கூறினார்.
பா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் பல்வேறு அணிகளின் அலங்கார அணிவகுப்பு வாகன ஊர்வலம் நேற்று மாலை கோவையில் நடந்தது. தெப்பக்குளம் மைதானத்தில் துவங்கிய ஊர்வலம், சுக்கிரவார்பேட்டை, தியாகிகுமரன் வீதி வழியாக ராஜவீதியை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பேசியதாவது: கொரோனா சீனாவில் துவங்கி உலக அளவில் பரவி உயிர் பலியை ஏற்படுத்தி கடும் துயரத்தை உருவாக்கியது. நம் நாட்டில் மார்ச்சில் துவங்கியது படிப்படியாக குறைந்து தற்போது நிம்மதியாகி இருக்கிறோம்.
மிகக் குறுகிய காலத்தில்,நம் நாட்டின் சொந்த தயாரிப்பில் ஒரு தடுப்பு மருந்தையும், ரஷ்யாவின் உதவியோடு மற்றொரு மருந்தையும் கண்டறிந்தோம். அதை நாம் கொரோனா ஒழிப்புப்பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம்.
இந்நிலையில் நமது நேச நாடுகளான, மியான்மர், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, நோபாள், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறோம்.
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சொனரோ, நம் நாட்டு மருந்துகளை பெற்றுக்கொண்டு, ராமாயணத்தில்; லட்சுமணரை காப்பாற்றிய ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வந்த படத்தை ஓவியமாக தீட்டி பிரதமர் மோடிக்கு அனுப்பி, எங்களை காப்பாற்றி ஆஞ்சநேயர் மோடி என்று நன்றி தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் உலக அளவில் உள்ள, 132 நாடுகளில் 90 நாடுகள் நம்மிடம் கொரோனா மருந்து கேட்டு அதை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. கடந்த பத்து நாட்களில் நம் நாடு மட்டுமல்ல, உலக அரங்கில் மோடியின் புகழ் ஓங்கி ஒலிக்கிறது.வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆள வேண்டும். தமிழக சட்டசபைக்கு அதிக எண்ணிக்கையிலான பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் செல்ல வேண்டும். இவ்வாறு கனகசபாபதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.,மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அணிகளின் அலங்கார அணிவகுப்பு வாகன ஊர்வலத்தில், ராமர்,லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் வேடமணிந்தவர்கள். வர்த்தக, மருத்துவ, விவசாயம் உள்ளிட்ட, 25 அணிகளின், 20 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அதன் பின் திரளான தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர்.
ALSO READ : 2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்த்திருக்கும் அதிசய மரம்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment