நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலன் மஸ்க்கிடம் கற்ற வித்தை... எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை உருவாக்கிய கோவை தமிழர்!

கோவையில் ப்ரணா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார்.

எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு பெயர் போன நிறுவனம் எலன் முஸ்க்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையை சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர், அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். எலக்ட்ரிக் பைக் தயாரிப்பதுதான் மோகன்ராஜ் ராமசாமியின் முக்கிய நோக்கமாகும்.

டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய போது , அவருக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு மோகன்ராஜின் ஐடியாவில் உதித்ததுதான் ப்ராணா என்ற எலக்ட்ரிக் பைக். கடந்த 2015 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மோகன்ராஜ் ராமசாமியின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஆம், ப்ரணா ் எலக்ட்ரிக் பைக் ஜனவரி 25 -ஆம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது. முதல் பைக் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைக்கிறார்.

எலக்ட்ரிக் பைக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசையும் ஏற்படுத்தாது. பயணிப்போரின் பாதுகாப்பாகவும், காற்று தடையை குறைக்கும் வகையில் ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 123 கி.மீ.,வேகத்தில் செல்லும். 4 விநாடியில் 60 கி.மீ.,வேகத்தை எட்டும் திறன் கொண்டது. பெட்ரோல் வாகனத்தை விட அதிக இழுவை திறன் கொண்டது. இந்த வாகனத்தில் கிளட்ச், கியர்கள் இல்லை என்பதால், பராமரிப்பு செலவு குறைவானது. இன்ஜினிலிருந்து தானாகவே பிரிந்து கொள்ளும் வசதியில் பிரேக் அமைக்கப்பட்டுள்ளதால், சறுக்கி கீழே விழும் வாய்ப்பு மிக குறைவாகும்.

ப்ரணா பைக்கில் எல்எப் பி ரக (LFP) பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. 2000 முறை மீண்டும் மீண்டும் இதை சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். 3,00,000 கி.மீ. வரை இந்த பேட்டரியை பயன்படுத்த முடியும். கோவையை தொடர்ந்து மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் ப்ரணா அறிமுகமாகவுள்ளது. வெளிமாநிலங்களிலும் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ப்ரணா வாகனத்தை ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த பைக்கின் பாகங்கள் 70 சதவிகிதம் உள்நாட்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. எலைட் மற்றும் கிராண்ட் என்ற இரு வகைகளில் இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது. இதில், எலைட் ரக பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 225 கிலோ மீட்டரும் கிராண்ட் ரக பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 126 கிலோ மீட்டரும் ஓட்ட முடியும். இந்த பைக்கின் விலை ரூ.2 லட்சம் முதல் 2.25 லட்சம் வரை இருக்கும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!