நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தண்டவாளத்தில் படுத்து போட்டோவுக்கு போஸ்! இங்கிலாந்து ரயில்வேயை மிரள வைத்த பெண்மணி.

 

புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக, ஒரு பெண் இங்கிலாந்தில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


புகைப்படம் எடுப்பதும் ஒருவித போதைதான். அந்த போட்டோ எடுக்கும் போதைக்கு அடிமையான பல ரிஷ்கான இடங்களில் கூட போட்டோவுக்கு போஸ் கொடுக்க முற்பட்டு ஆபத்தில் சிக்கியுள்ளார். சிலர் இப்படி நிதானம் இல்லாமல் போஸ் கொடுத்து உயிரையும் விட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், இங்கிலாந்து பெண்மணி ஒருவர் சிக்கியிருக்கிறார். அந்தப் பெண்மணி செய்த செயலை கண்டு இங்கிலாந்து ரயில்வே துறையே சற்று மிரண்டு போய்விட்டது. இங்கிலாந்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அந்தப் பெண், சி.சி.டி.வி காட்சிகள் மூலமாக பிடிபட்டுவிட்டார்.

அடுத்து இங்கிலாந்தின் நெட்வொர்க் ரெயில் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பெண் செய்த இந்த காட்சிகளைப் பகிர்ந்துகொண்ட நெட்வொர்க் ரயிலின் ட்விட்டர் பக்கம் "இல்லைஇல்லைஇல்லைலெவல் கிராசிங்குகள் புகைப்படம் எடுப்பதற்கான இடம் அல்ல. லெவல் கிராசிங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நாம் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு சிறு தவறுகூட வாழ்க்கையையே மாற்றும் விளைவுகளை ஏற்படுத்தும்என தெரிவித்திருக்கிறது.


😰No, no and NO. Level crossings are not the place for a photo shoot! 📷❌ If you're taking exercise, please take extra care at level crossings. Remind children to stay safe and set a good example. ✋👀👂ALWAYS stop, look and listen. 🚧


ALSO READ :   'குட்பை' சொல்லிவிடுமா 'கூகுள்?'

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!