தயிர், நட்பு பாக்டீரியாக்களின் புதையல். இது உச்சந்தலையில் பொடுகு பரப்பப்படுவதைத் தடுக்க உதவுகிறது.
குளிர்காலம், கோடைக்காலம் என எந்தக் காலமாக இருந்தாலும், தலைமுடி பராமரிப்பு என்பது மிகப் பெரிய வேலை எனப் புலம்புபவர்கள்தான் அதிகம். அதிலும் பொடுகு தொல்லைக்குத் தீர்வு தேடி அலைபவர்கள் ஏராளம். அதிக செலவு செய்து பேர் தெரியாத ட்ரீட்மென்ட்டுகளை எடுத்துக்கொண்டு முடி உதிர்வு பிரச்சனையில் மாட்டிக்கொண்டவர்களின் லிஸ்ட் நீளம். ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த செலவில் இந்த எளிமையான ஹோம் ரெமடிகளை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பொடுகு மறைந்து போகும்.
தயிர்
ஒரு கப் புதிய தயிர், உங்கள் தலையில் இருக்கும் பொடுகை நீக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் தலைமுடியை ஷாம்புவோடு சிறிதளவு தயிரைக் கலந்து, தேவைப்பட்டால் சிறிதளவு கருப்பு மிளகு துளையும் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் இந்தக் கலவையோடு தலைமுடியை ஊறவைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவி, உங்கள் வழக்கமான ஷாம்பூ தேய்த்து மீண்டும் முடியை அலசுங்கள். தயிர், நட்பு பாக்டீரியாக்களின் புதையல். இது உச்சந்தலையில் பொடுகு பரப்பப்படுவதைத் தடுக்க உதவுகிறது.
எலுமிச்சை
இது பயன்படுத்துவது நிச்சயம் அனைவருக்கும் எளிது. ஒரு முழு எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 2 முதல் 3 நிமிடங்கள் கழித்து, வழக்கமான ஷாம்பூவுடன் தலைமுடியை அலசுங்கள். மேலும், ஒரு குவளை தண்ணீரில் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, இறுதியாக உங்கள் தலைமுடியை அலசலாம். பொடுகு மறைந்து போகும் வரை தவறாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யவும். எலுமிச்சையின் அமிலத் தன்மை உங்கள் முடியின் pH-ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர்
ஆப்பிள் சிடர் வினிகர், பொடுகு போக்க ஓர் சிறந்த இயற்கையான தீர்வு. இது இயற்கையில் அமிலம் என்பதால், உச்சந்தலையில் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும், பூஞ்சையின் வளர்ச்சியையும் தடுக்கிறது. ஷாம்பூவுடன் வழக்கம் போல் தலைமுடியை அலசியபின், ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்தி இறுதியாக வாஷ் செய்யுங்கள். அதன்பிறகு தண்ணீரால் கழுவ அவசியமில்லை.
கற்றாழை
கற்றாழை, எரிச்சலைக் குறைக்கிறது மற்றும் ஈரப்பத மூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. இது நமைச்சலைக் குறைக்கிறது மற்றும் பொடுகுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது பொடுகை எதிர்க்கும் பாக்டீரியா. கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூவுடன் கழுவுங்கள்.
வெந்தய விதைகள்
வெந்தயம் விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது வறட்சி, முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றைத் தடுக்கிறது. அவை நம்முடைய கூந்தல் வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை ஈரப்பதமாக்குகின்றன. வெந்தயம் விதைகள் நீண்ட, அடர்த்தியான மற்றும் அழகான கூந்தலுக்கு முக்கியம். ஒரே இரவில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து, உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 15 – 20 நிமிடங்கள் விட்டு, பின்னர் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
Comments
Post a Comment