நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Budget 2021: சாமானியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? எது விலை குறையும், எது கூடும்?

 ஊடக அறிக்கைகளின் படி, தளபாடங்கள் மூலப்பொருட்கள், செப்பு ஸ்கிராப், தொலைத் தொடர்பு உபகரணங்கள், ரசாயன மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள சுங்க வரியில் இந்திய அரசு மாற்றங்களை அறிவிக்கக்கூடும்.


Union Budget 2021:

மத்திய பட்ஜெட் 2021 இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டின் இறுதி வரைவை முடிவு செய்வதில் மும்முரமாக உள்ளார். அவர் 2021 பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

சாமானியரின் பார்வையில், ஒட்டுமொத்த நாடும் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது வருமான வரி வரம்பை உயர்த்துவதற்கான தளர்விற்காகத்தான். அடுத்தபடியாக, எவற்றின் விலை குறையும், எவற்றின் விலை அதிகரிக்கும் என்பதை அறியவும் மக்கள் காத்திருக்கிறார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்ட பின்னர், மறைமுக வரிகளைப் பொறுத்தவரை நிதி அமைச்சரிடமிருந்து மக்களுக்கு அதிகம் எதிர்பார்ப்பில்லை. ஆனால் ஊடக அறிக்கையின்படி, நரேந்திர மோடி அரசு ஃப்ரிட்ஜ்கள், சலவை இயந்திரங்கள், தளபாடங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான சுங்க வரியை குறைக்கலாம் அல்லது உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றில் சில பொருட்களின் விலை குறையக்கூடும், சிலவற்றின் விலை அதிகரிக்கக்கூடும்.


Budget 2021: இவற்றின் விலை குறையலாம்:


20 பொருட்களின் சுங்க மற்றும் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, தளபாடங்கள் மூலப்பொருட்கள், செப்பு ஸ்கிராப், தொலைத் தொடர்பு உபகரணங்கள், ரசாயன மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள சுங்க வரியில் இந்திய அரசு மாற்றங்களை அறிவிக்கலாம். பி.டி.ஐ அறிக்கையின்படி, 2021 பட்ஜெட்டில் (Budget), சுமார் 20 பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும்.

மெருகூட்டப்பட்ட வைரம், ரப்பர் பொருட்கள், தோலால் தயாரிக்கப்படும் பொருட்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை அவற்றில் சிலவாகும்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்கும், 'ஆத்ம நிர்பர் பாரத்' (Atmanirbhar) அதாவது தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த பொருட்களின் இறக்குமதி வரியைக் குறைக்கும் மனநிலையில் இந்திய அரசு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த நடவடிக்கை உற்பத்தித் துறையை உறுதியோடு வலுப்படுத்துவதோடு, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறனையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.


இதை இனி மலிவாக வாங்கலாம்:

Furniture வாங்கும் யோசனையில் நீங்கள் இருந்தாலோ அல்லது அதன் மொத்த விற்பனையில் இருந்தாலோ உங்களுக்கு நல்ல செய்தி உள்ளது. பட்ஜெட்டிற்கு பிந்தைய காலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பட்ஜெட் 2021-க்கு பிந்தைய நாட்களில் தளபாடங்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைக்கும் மனநிலையில் இந்திய அரசங்கம் இருப்பதால், தளபாடங்கள் மலிவாகக்கூடும். நம் நாட்டிலிருந்து தளபாடங்களின் ஏற்றுமதி மிகக் குறைவாக (சுமார் 1 சதவீதம்) உள்ளது. அதே நேரத்தில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் இந்தியாவை விட இதில் முன்னிலையில் உள்ளன.


Budget 2021: இவற்றின் விலை அதிகரிக்கக்கூடும்:

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, குளிர்சாதன பெட்டிகள் (Fridge), சலவை இயந்திரங்கள் (Washing Machine) மற்றும் துணி உலர்த்திகள் (Cloth Drier) போன்ற சில பொருட்களுக்கான வரி அதிகரிக்கக்கூடும். ஆகையால் இவற்றின் சந்தை விலையும் உயரக்கூடும்.


Budget 2021: PLI திட்டதின் மீது கவனம்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்துறையை ஊக்குவிக்கவும் இதில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் போன்ற பல பொருட்களில் இறக்குமதி (Import) வரியை குறைக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 'ஆத்ம நிர்பர் பாரத்' பிரச்சாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது. 


ALSO READ :  நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!