தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
மூணாறில் உறைபனி.
- Get link
- X
- Other Apps
மூணாறு :
மூணாறில் குளிர்காலம் நவம்பரில் துவங்கியபோதும் ஜன., 16 வரை மழை பெய்தது.
அதனால் குளிர் காலத்தின்குளிர் இன்றி மழைக்கால குளிர் இருந்தது. அதன்பிறகு ஓரிரு நாளில் குளிர் அதிரித்துபழைய மூணாறு பகுதியில் ஜன., 18 ல் வெப்பம் 'ஜீரோ' டிகிரி செல்சியசாக குறைந்து உறைபனி ஏற்பட்டது. பின்னர் வறண்ட காலநிலை நிலவியது.நேற்று காலை மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் 'ஜீரோ' டிகிரி செல்சியஸ்பதிவானது.
நகரிலும், பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் வெப்பம் மைனஸ்-2 டிகிரி பதிவாகி உறைபனி ஏற்பட்டது. வாகனங்களின் மேல் பகுதியிலும், கண்ணாடிகளிலும்பனிகட்டிகள் உருவாகின. மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை கவர்ந்தபோதும் உள்ளூர்வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.---------
ALSO READ : ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment