கடந்த புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 21,57,538 செயலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இது, முந்தைய நாளிலிருந்து 1,25,561 பேர் அதிகம்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் மற்றும் மூன்றாம் தரப்பு சமூக ஊடக பகுப்பாய்வு தளங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி கோவிட் -19 அத்தியாவசியங்களான ரெம்டெசிவிர் ஊசி, ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் போன்றவற்றின் தேடல்களைக் குறிக்கும் அளவீடுகள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளன. கடந்த புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 21,57,538 செயலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இது, முந்தைய நாளிலிருந்து 1,25,561 பேர் அதிகம்.
ஏப்ரல் 17-ம் தேதியுடன் சில பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளவீடுகளுக்கான விளக்கப்படங்கள் பார்க்கையில், கடந்த இரண்டு வருடங்களில் இந்த தேடல் சொற்களின் ஆர்வம் எவ்வாறு உயர்ந்தது என்பதைக் காட்டுகிறது. புவியியல் ஆர்வத்தைப் பொறுத்தவரை, “எனக்கு அருகிலுள்ள ரெமெடிவிர்” என்ற சொல் மகாராஷ்டிராவில் அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது. அதே சமயம் டெல்லி, “எனக்கு அருகிலுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்”, “எனக்கு அருகிலுள்ள கோவிட் ஆர்.டி பி.சி.ஆர் சோதனை” மற்றும் “அருகிலுள்ள கோவிட் மருத்துவமனை” உள்ளிட்டவற்றைப் பதிவு செய்திருக்கிறது.
எனக்கு அருகிலுள்ள கோவிட் தடுப்பூசி மையங்கள்” என்ற தேடல் வாக்கியம், மார்ச் 7-13 வாரத்தில் உயர்ந்திருக்கிறது.
ஏப்ரல் 17-ம் தேதி முடிவில், கொரோனா தேடலுக்கான ஆர்வம் தமிழ்நாட்டில் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட பகுதி மற்றும் நேரத்திற்கான விளக்கப்படத்தின் மிக உயர்ந்த புள்ளியுடன் தொடர்புடைய தேடல் ஆர்வத்தை இந்த எண்கள் குறிக்கின்றன. 100-ன் மதிப்புதான் பிரபலமான வார்த்தையின் உச்சம். 50-ன் மதிப்பு என்றால் பாதி பிரபலமானது. கூகுள் படி, “எனக்கு அருகில்” என்ற வாக்கியம், தேடுபொறியில் அந்த வினவலை இயக்குபவர்களால் “நோக்கத்தின் சிக்னல்” என்பதைக் குறிக்கிறது.
கூகுளில் அதிக தேவை உள்ள இந்த அத்தியாவசியங்களைத் தேடும் நபர்களுக்கு மேல் அதிகமாக, அவர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களிலும் போஸ்ட் செய்வதை நாடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, “ரெமெடிவிர்” என்ற வார்த்தையுடன் இந்த தளங்களில் 200-க்கும் மிகாமல், போஸ்டுகள் ஏப்ரல் 7 வரை சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் போஸ்ட் செய்யப்பட்டன.
இருப்பினும், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே 1,026 மற்றும் 1,207 பதிவுகள் இந்த தளங்களில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், ஏப்ரல் 1 முதல் 16 வரை, “ஆக்ஸிஜன்” என்ற சொல் கொண்ட பதிவுகள் சராசரியாக ஒரு நாளைக்கு 3,700-ஆக இருந்தன. மேலும், இது ஏப்ரல் 17 மற்றும் 18 தேதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 6,750 போஸ்டுகளாக இரட்டிப்பாகியது.
Comments
Post a Comment