நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிகப் பெரிய டெலெஸ்கோப் FAST; சீனாவின் பிரம்மாண்டமான Sky Eye

 சீனாவின் தியான்யன் அல்லது "ஸ்கை ஐ"  (Sky Eye) எனவும் அழைப்படும் இந்த டெலெஸ்கோப்பை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த சீனா, இதனை பயன்படுத்தவதற்கான விண்ணப்பங்களை  உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு  ஆழைப்பு விடுத்துள்ளது.

சீனாவின்  தென்மேற்குப் பகுதியான பிங்க்டாங்க் மாகாணத்தின் மலைகளுக்கு இடையே நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஆன பாஸ்ட் (FAST - Five hundred meter Aperture Spherical Telescope) என்ற தொலை நோக்கியை, சீனா உலக பயன்பாட்டிற்கு திறந்துள்ளது.  

சீனாவின் தியான்யன் அல்லது "ஸ்கை ஐ"  (Sky Eye) எனவும் அழைப்படும் இந்த டெலெஸ்கோப்பை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த சீனா, இதனை பயன்படுத்தவதற்கான விண்ணப்பங்களை  உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு  ஆழைப்பு விடுத்துள்ளது.

சுமார் 1500 அடி விட்டத்தில் உள்ள இந்த FAST டெலஸ்கோப் மார்ச் 30 அன்று மதியம் 12 மணிக்கு பெய்ஜிங்கில் உலகிற்கு முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி திறக்கப்பட்டதன் மூலம், சர்வதேச அறிவியல் உலகத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

 பாஸ்ட் என்ற இந்த  டெலஸ்கோப் டிஷ் ஆன்டனாக்குள் ஒரே சமயத்தில் 30 கால்பந்து அணிகள் தாராளமாக விளையாடலாம் என்ற அளவிற்கு பெரிது.

சீனாவில் 'ஃபாஸ்ட்' இன் 'அறிவுசார் சொத்துரிமை' (Intellectual Property Right) உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வானியலாளர்கள் இதனை பயன்படுத்த விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 30 அன்று பெய்ஜிங் நேரப்படி இரவு 12 மணி முதல் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று,  உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு சீன ஆழைப்பு விடுத்துள்ளது. பாஸ்ட்-ன்  தலைமை பொறியாளர் சியாங் ஃபங் கூறுகையில், "ஒன்றரை மாதங்கள் வரை முதல் தொகுதிக்கான வெளிநாட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்” என்றார்.

இதனை பயன்படுத்த விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் எங்கள் இணையதளத்தில் பதிவுசெய்து, சில தனிப்பட்ட தகவல்களையும் அறிவியல் துறையில் அவர்களது குறிக்கோள்கள், திட்டங்கள் போன்ற  தகவல்களை சமர்பிக்க வேண்டும் நாங்கள் அதை பின்னர் மதிப்பாய்வு செய்வோம், மதிப்பாய்வின் முடிவுகள் ஜூலை 20 அன்று வெளியிடப்படும் என்றார்.


ALSO READ : வீட்டுக்கு ஒரு விமானம் இருக்கும் விந்தை: அச்சரியப்படுத்தும் அமெரிக்க நகரம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்