நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் உயரமான பெண் படைத்த மேலும் 3 கின்னஸ் சாதனை..!!

உலகின் உயரமான பெண் ருமேசா கெல்கி மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (24). இவர் 215.16 செண்டிமீட்டர் ( 7 அடி 7 அங்குலம்) உயரம் உடையவர்.

1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். அதாவது உலகின் மிக நீளமான விரல் (11.2 செ.மீ ) கொண்ட பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

மேலும் உலகின் மிகப்பெரிய கைகள் உடைய பெண் என்ற சாதனையும் இவர் வசமாகியுள்ளது. அவரது வலது கை 24.93 செமீ (9.81 அங்குலம்) மற்றும் இடது கை அளவு 24.26 செமீ (9.55 அங்குலம்) கொண்டதாக உள்ளது.

உலகின் நீண்ட முதுகு 59.90 செமீ (23.58 அங்குலம்) உடைய பெண் என்பதற்காகவும் தற்போது இவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்