உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது, உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.மதுபானத்தின் நன்மைகளை பற்றி எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு இடத்திலும் அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது. ஏனெனில், ஏன் குடிக்கிறோம்? எதற்காக குடிக்கிறோம்? எது அளவு? எது அதீதம்? என்கிற 'ஐடியாவே' இல்லாமல் குடிப்பவர்களே இங்கே அதிகம். எனவே மதுபானத்தின் நன்மைகளை பற்றி பேசுவது தவறான எடுத்துக்காட்டாகி விட 99.9% வாய்ப்புள்ளது. மேலும், தீமைகளை பற்றி பேசுவது இன்னும் கொடுமை; தானாக அனுபவிக்கும் வரை எவரும் எதையும் புரிந்துகொள்ள போவதில்லை! ஆக மதுபானத்தின் நன்மை தீமைகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காமல், நேரடியாக அந்த 311 லிட்டர் விஸ்கி பாட்டிலின் ஏலத்திற்குள் செல்வோம்!
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது, உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
இந்த பாட்டில் வருகிற மே 25 அன்று ஏலம் விடப்பட உள்ளது, மேலும் இது இதுவரை வாங்கப்பட்ட விலையுயர்ந்த விஸ்கி பாட்டில்களுக்கான உலக சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக டெய்லி ரெக்கார்ட் கூறுகிறது. இந்த விஸ்கி பாட்டில் ஆனது 5 அடி 11 அங்குல உயரம் கொண்டது, அதில் 32 ஆண்டுகள் பழமையான மக்கலன் விஸ்கி நிரப்பப்பட்டுளள்து. ப்ஹா மை ஹோல்டிங்ஸ் க்ரூப் இன்க். & ரோஸ்வின் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Fah Mai Holdings Group Inc. & Rosewin Holdings PLC) உருவாக்கிய இந்த பாட்டிலை லியோன் மற்றும் டர்ன்புல் (Lyon & Turnbull) வழியாக ஏலம் விடப்பட உள்ளது.
இது விற்பனையாகும் ஏலத்தொகையில் ஒரு பகுதி மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு செல்லும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. லியோன் மற்றும் டர்ன்புல் வலைத்தளத்தின்படி, இந்த விஸ்கி "மிகவும் மென்மையானது. வேகவைத்த ஆப்பிள் (மற்றும் வேகவைத்த ஆப்பிள் தோல்), பியர் சிரப், செதில்களாகப் பிரிக்கப்பட்ட பாதாம் பருப்பு ஆகியவற்றின் நறுமணத்தை உள்ளடக்கியது. இது நுட்பமானது. இது வெண்ணிலா ஃபட்ஜின் தடயத்தையும் உலர்ந்த செர்ரியின் சுவையையும் கொண்டது".
இந்த விஸ்கி மே 3, 1989 இல் காய்ச்சப்பட்டு, பின்னர் ஓக் ஹாக்ஹெட்ஸுக்கு மாற்றப்பட்டது. அங்கே அது 32 ஆண்டுகளாக தி மக்கலன் டிஸ்டில்லரியில் பாதுகாக்கப்பட்டது. இப்போது, அந்த விஸ்கி 178 x 1.75 லிட்டர் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது என்ன விலைக்கு ஏலம் போகும் என்பது குறித்த கணிப்புகள் தற்போது வரை இல்லை!
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு, க்ளென்ஃபிடிச் விஸ்கி (Glenfiddich Whisky) நிறுவனம் 15 லிமிடெட் எடிஷன் லிக்கர் என்எஃப்டி-களை ஒவ்வொன்றும் ரூ.13.5 லட்சம் என்கிற விலையில் அறிமுகப்படுத்தியது. 15 லிமிடெட் எடிஷன் லிக்கர் என்எஃப்டி-களின் சீரிஸை வெளியிட, இந்நிறுவனம் பிளாக்பார் (BlockBar) உடன் கூட்டு சேர்ந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment