நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிக ஆழமான குகை.......

 ஜார்ஜியா நாட்டில் இருந்து பிரிந்த அப்காசியாவின் காக்ரா மாவட்டத்தில், காக்ரா மலைத் தொடரில் அமைந்திருக்கிறது, வெரிவ்கினா குகை. இதுதான் இந்த பூமியில் அறியப்பட்ட மிகவும் ஆழமான குகை ஆகும்.


இதன் ஆழம் 2,212 மீட்டர் ஆகும். அதாவது 7 ஆயிரத்து 257 அடி. இதன் நுழைவு வாசல், கடல் மட்டத்தில் இருந்து 2,285 மீட்டர், அதாவது 7 ஆயிரத்து 497 அடி உயரத்தில் இருக்கிறது. அந்த நுழைவு வாசலானது, சுமார் 10 அடி மற்றும் 13 அடி என்ற அளவில் குறுக்கு வெட்டாக அமைந்துள்ளது.

1968-ம் ஆண்டு இந்த குகை ‘S-115’ என்று அறியப்பட்டது. அதற்கு காரணம் கிராஸ்நோயார்ஸ்கில் இருந்து வந்தவர்களால் இந்தக் குகை கண்டறியப்பட்டு, அவர்கள் இதன் உள்ளே சென்றனர். அவர்களால் 115 மீட்டர் (377 அடி) வரை மட்டுமே செல்ல முடிந்தது. அதனால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் 1982-ல் மாஸ்கோவில் இருந்து வந்த ஒரு குழு, இந்தக் குகையை இரண்டாவது முறையாக கண்டறிந்து, அதன் உள்ளே சென்றது. அவர்களால் இந்தக் குகைக்கு ‘P1-7’ என்ற பெயரிடப்பட்டது. அந்தக் குழுவினர் 1986 வரை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, 440 மீட்டர் வரையான ஆழத்தை அடைந்தனர். இது 1,440 அடி ஆகும். 1983-ம் ஆண்டு குகை ஆய்வாளரின் ஒருவரான அலெக்சாண்டர் வெரவ்கின் என்பவர், ஒரு ஆய்வில் இறந்த காரணத்தால், அவருடைய பெயரில் இந்த குகையும் ‘வெரிவ்கினா குகை’ என்று பெயர் பெற்றது.

1986-ம் ஆண்டிற்குப் பிறகு, 2000-ம் ஆண்டு வரை இந்தக் குகையில் மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்படவில்லை. அதன்பிறகு 2000-ம் ஆண்டு ஒரு புதிய குழு இந்த குகை பகுதிக்கு வந்து ஆய்வு செய்தது. 2015 வரை அவர்கள் குகையின் அடிப்பகுதியை ஆய்வு செய்தபோதிலும், அதன் ஆழம் 440 மீட்டராகவே இருந்தது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தக் குழு, இந்த குகைக்கு மற்றொரு நுழைவுப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்தது. அதன் வழியாக ஆய்வு செய்தனர். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்த குகையின் இறுதி ஆழம் 2,212 மீட்டர் (7,257 அடி) என்று உறுதி செய்யப்பட்டது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்