நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குழந்தையின் தலை எங்கே..? உங்க கண்ணுக்கு தெரிகிறதா? குழப்பும் புகைப்படம்...

இந்த படத்தை பார்க்கும் பலர் போட்டோவில் இருப்பது பேக்பேக்கை முதுகில் மாட்டி கொண்டு ஸ்விம்மிங் பூலில் இருக்க கூடிய மனிதனா அல்லது அளவில் பெரிய தலையுடைய குழந்தை அந்த மனிதனின் முதுகில் தொங்கி கொண்டிருக்கிறதா ?
ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சில நேரங்களில் மக்களின் மனதை குழப்பி தடுமாற செய்கின்றன. அவற்றில் மறைந்திருக்கும் விலங்குகள் முதல் மனிதர்கள் வரை, நாம் பல ஆப்டிக்கல் இல்யூஷன்களை கண்டிருக்கிறோம் .

சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்று உங்களை மிகவும் குழப்பும் ஒன்று. கீழ்காணும் படம் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தை பார்க்கும் பலர் போட்டோவில் இருப்பது பேக்பேக்கை முதுகில் மாட்டி கொண்டு ஸ்விம்மிங் பூலில் இருக்க கூடிய மனிதனா அல்லது அளவில் பெரிய தலையுடைய குழந்தை அந்த மனிதனின் முதுகில் தொங்கி கொண்டிருக்கிறதா அல்லது தலையே இல்லாத குழந்தையா என்பதை தீர்மானமாக சொல்ல முடியாமல் தலை போட்டு தைத்து கொண்டு வருகின்றனர். நீங்களே பாருங்கள் உங்களுக்கும் மேற்சொன்ன அதனை குழப்பங்களும் வந்து போகும் இந்த போட்டோவை பார்த்தால்..
முதுகில் குழந்தையுடன் ஒரு மனிதன் தண்ணீரில் இருப்பதை காட்டும் இந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்பு Reddit-ல் "தலையில்லாத குழந்தை"என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது.

நீங்கள் எத்தனை முறை உற்று உற்று பார்த்தாலும் கண் மற்றும் தலை வலிக்கிறதா.? குழந்தையின் தலையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா.! கவலைப்பட வேண்டாம், நீங்கள் தனியாக இல்லை.. ஏனென்றால் பலரால் இந்த போட்டோவை பார்த்து குழந்தையின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாக்களில் மக்களை திகைக்க வைத்து உள்ளது. குழந்தையின் தலை தெரிகிறதா..? கண்டுபிடிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்..

பலரால் புகைப்படத்தில் குழந்தையின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சோஷியல் மீடியாக்களின் கமெண்ட்ஸ் செக்ஷ்னில் தங்கள் விரக்தியை பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். என்னால் அதை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்றும், குழந்தையை என்னால் பார்க்க முடியவில்லை தலைவலி தான் மிச்சம் என்றும் பலர் குறிப்பிட்டனர்.

நீங்கள் இந்த போட்டோவை நன்றாக கூர்ந்து கவனியுங்கள். வெட்சூட்டில் உள்ள சிறிய உடல் பெரியவரின் உடலுடன் இணைக்கப்பட்டதாக தெரிகிறதா.? ஆனால் குழந்தையின் தலை எங்கே.! தந்தையின் முதுகில் இருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படம் தான் இது என்று பலருக்கும் புரிகிறது. உங்களுக்கும் தானே..

நீங்கள் போட்டோவில் இருக்கும் மனிதனின் தலைமுடியை கவனியுங்கள். அவரது தலையின் பின்புறத்தில் ஒரு சிறிய வீக்கம் இருப்பது போல தெரிகிறதல்லவா.! அந்த வீக்கம், உண்மையில், குழந்தையின் தலையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன வாய்ப்பு தானா.? அப்படி என்றால் உண்மையில் குழந்தையின் தலை இந்த போட்டோவில் தெரிகிறதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் இது ஃபோட்டோஷாப் ட்ரிக்காக கூட இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது தான்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்