நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தும்பிக்கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்ட வன ஊழியர்.... யானையின் காதில் தீ வைத்தவர்களை என்ன செய்ய போகிறது வனத்துறை?

 
மசினகுடி அருகே அடிக்கடி ஊருக்குள் வந்ததால் யானையின் காதுக்கு தீ வைத்தவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் சில நாள்களுக்கு முன் ஆண் யானை நடமாடி வந்தது. கடந்த மாதம் 28-ந்தேதி கும்கி யானைகளின் உதவியுடன் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டது. முதுகில் இருந்த காயத்துக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின், யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் சாலையில் நிற்பதையும் வழக்கமாக வைத்திருந்தது. இந்த நிலையில், அந்த யானையின் காதில் சிலர் தீப்பந்தம் கொண்டு தீ வைத்துள்ளனர். அதில் , யானையின் இடது காதில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதனால் , காதின் ஒரு பகுதி அழுகி அறுந்தும் விழுந்தது. தொடர்ந்து, யானைக்கு இரண்டு நாட்களாக கடும் ரத்த போக்கு ஏற்பட்டது. சிகிச்சையளித்தும் சோர்வுடன் காணபட்டது.

இந்தநிலையில், அந்த யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். வாசிம், விஜய், கிருஷ்ணா, கிரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கபட்டன. கால்நடை மருத்துவர்கள் இரண்டு முறை அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்திய சில நிமிடங்களில் மயங்கிய யானை கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த, வனத்துறையினர் உடனடியாக கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த முயற்சித்தனர்.
(கிழிந்த காதுடன் யானை)

பின்னர் , 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கும்கி யானைகளின் உதவியுடன் காயமடைந்த யானை லாரியில் ஏற்றபட்டு முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தெப்பாக்காடு வளர்ப்பு முகாம் வாசலில் வைத்தே அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. எவ்வளவோ முயற்சித்தும் காட்டு யானையை காப்பாற்ற முடியாததால், வனத்துறை அதிகாரிகள் கடும் வேதனையடைந்தனர். வனத்துறை ஊழியர் பெள்ளன் என்பவர் பலியான யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு அழுதது கடும் வேதனையை ஏற்படுத்தியது. யானையின் உடல் பரிசோதனையில் நேற்று நடந்தது. அப்போது, யானையின் காது பகுதியில் தீ வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் யானையின் காது பகுதியில் யாரோ தீ வைத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை போன்ற பேருயிருக்கு இது போன்ற கொடுமைகள் நடந்தால் வெளியே தெரிந்து விடுகிறது. யானைகள் மட்டுமல்லாமல் காட்டுப்பன்றி, மான்கள், குரங்குகள் உள்ளிட்ட சிறு உயிரினங்களையும் கொடூரர்கள் இரக்கமே இல்லாமல் துன்புறுத்தி வருகின்றனர். இத்தகைய கொடூரர்களுக்கு கடும் தண்டனை கொடுத்தால்தான் விலங்குகளை துன்புறுத்துவது குறையும் '' என்கின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்