தடுப்பு மருந்துகள் குறித்த தகவலை இனி கூகுளில் தேடலாம்..!- சுந்தர் பிச்சை.
- Get link
- X
- Other Apps
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கடந்த திங்களன்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வை குடிமக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர் நிதி நிதியை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தடுப்பு மருந்துகள் எங்கு கிடைக்கின்றன, எப்போது கிடைக்கின்றன என்று உலக மக்களுக்கு அறிவுறுத்த கூகுள் நிறுவனம் உதவத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
கூகுளில் ஷாப்பிங் மால்கள் திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் அருகில் உள்ளனவா என்று தேடலாம். இதேபோல ‛வாக்ஸின் நியர் மீ' என தேடினால் பயனாளர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே தடுப்பு மருந்துகள் எங்கே எப்போது செலுத்தப்படுகின்றது என்கிற விவரத்தை கூகுள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் கூகுள் மேப் உதவியுடன் அந்த இடத்துக்கு பயனாளர்கள் தங்கள் வாகனங்கள் மூலமாகச் சென்று தடுப்பு மருந்துகளை செலுத்திகொள்ள முடியும். ஜிபிஎஸ் உதவியுடன் இந்தத் திட்டத்தை கூகுள் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதற்காக 15 கோடி அமெரிக்க டாலர் நிதியை கூகுள் ஒதுக்கியுள்ளது.
கிராமப்பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தடுப்பு மருந்துகளை விநியோகிக்க கூகுள் நிறுவனம் மோர்ஹவுஸ் ஸ்கூல் ஆப் மெடிசன், சிடிசி உள்ளிட்டவர்களுடன் கைகோர்த்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்துகளின் இடம் கூகுள் மேப்பில் தேடினால் கிடைக்கும். முதற்கட்டமாக அமெரிக்காவின் அரிசோனா, லூசியானா, மிசிசிப்பி, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment