Health News: கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள், பானங்கள்
- Get link
- X
- Other Apps
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. எந்த வகையான உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் உணவு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் பானமும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, தாய் சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம். உணவு புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
சில உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்
கர்ப்ப காலத்தில் (Pregnancy) தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. இவை உங்களையோ அல்லது உங்கள் குழந்தையையோ ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். எந்த வகையான உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சாத பால் மற்றும் பனீர்
காய்ச்சாத பால், பனீர் ஆகியவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த பாக்டீரியாக்களின் விளைவுகள் சில சமயம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தாகலாம்.
முளைகட்டிய பயறு வகைகள்
முளைகட்டிய பயறு வகைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை சமைத்தால் மட்டுமே இவை பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.
காஃபி
காஃபின் (Coffee) மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை அடைகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் காஃபியை அதிகமாக உட்கொள்வது கருவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் பிறக்கும்போதே குழந்தைகளின் எடை இழப்பு அபாயத்தையும் இது அதிகரிக்கும்.
முட்டை
சமைக்காத முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருக்கலாம். இதன் காரணமாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் ஏற்படலாம். சில நேரங்களில் இது கருப்பையில் பிடிப்புக்கான அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
சமைக்கப்படாத மீன் வகைகள்
சமைக்கப்படாத மீன் பல தொற்றுநோய்களை ஏற்படுத்தும். அந்த நோய்த்தொற்றுகளில் சில, கர்ப்பிணிப் பெண்களை மட்டுமே பாதிக்கும். மற்ற நோய்த்தொற்றுகள் உங்கள் குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும். ஆகையால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பப்பாளி
பப்பாளியில் (Papaya) லேடெக்ஸ் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது கருவின் வளர்ச்சியை பப்பாளி தடுக்கலாம்.
மதுபானம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவதைத் கண்டிப்பாக தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மதுபானம் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் இது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.
ALSO READ : Viral ஆகிறது 4 மாத கர்ப்பிணி ஆணின் புகைப்படம்! கொரோனா கால உண்மை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment