நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாரதிராஜாவின் Locations.... கிராமங்களுக்கு உயிர் கொடுக்க நினைக்கும் பிரான்ஸ்!

கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்கும் சட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்றியிருக்கிறது.

அழகான மலைக்கிராமம். தட்டி எழுப்பும் கொக்கரக்கோகோ சேவல் சத்தம். மாட்டு மணிகளின் ஓசை. காற்றில் அசையும் புளியமர இலைகளின் சிலிர்ப்பு, இவை அனைத்தையும் எங்கோ கேள்வி பட்டது போல இருக்கலாம். வேறு எங்கும் இல்லை, நம்மில் பலர் இவற்றை பாரதிராஜவின் படங்களில் பார்த்திருப்போம்.

வேலை சூழல் காரணமாக இன்று நகரங்களில் வசிக்கும் 90 சதவிகிதம் பேர் கிராம புறங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்களே.

நகரங்களில் வாழும் பலருக்கும் குருவிக்கூடு போல உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அன்றாட வாழ்க்கை. அனுதினமும் நைல் நதி போல விரிந்திருக்கும் டிராபிக்கை கடந்து சென்று வேலை. பணி முடிந்து டிராபிக்குகளில் மாட்டிக்கொண்டு மறுபடியும் வீடு. பிறகு மீண்டும், அடுத்த நாள் இதே போல ரொட்டீன் வாழ்க்கை...

இப்படிப்பட்ட நகர வாழ்க்கையில் இருந்து மீள நினைத்தாலும், வாழ்க்கை சூழலால், மீள முடியாமல் தவிப்பவர்கள் தான் ஏராளம்.

ஆனால் கிராமப்புற வாழ்க்கையின் அன்றாட அம்சங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துபவை. இன்றும் அமைதியும், நிம்மதியும் தேவை என்றால் கிராமத்தையே நாம் நாடுகிறோம்.

கிராமங்கள் தான் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். இப்படிப்பட்ட கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்த பிரான்ஸ், கிராமப்புற வாழ்க்கையின் "உணர்ச்சி மிகுந்த பாரம்பரியத்தை" பாதுகாக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

நவீனமயமாகும் கிராமப்புறங்களில் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் பல ஒலி மாசு மற்றும் துப்புரவு தொடர்பானதாக காணப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, நீதிமன்ற வழக்குகளின் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்ட ஒரு மசோதாவுக்கு பிரான்ஸ் நாட்டு செனட்டர்கள் ஒப்புதல் அளித்தனர். அப்படி புகாரளிப்பவர்களுக்கு எதிராக கிராமவாசிகள் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கிராமப்புற வாழ்க்கையின் "உணர்ச்சி மிகுந்த பாரம்பரியத்தை" பாதுகாக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

விரிவடையும் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரான்சின் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுப்பதாக இந்த சட்டம் இருக்கும் என்றும் செனட்டர்கள் கூறுகின்றனர். இந்த சட்டம், கிராமப்புறங்களில் மண்ணின் மணத்துடன் பறவைகளில் ஒலிகள், டிராக்டர்கள் மற்றும் தேவாலய மணியோசைகள் என பல கிராமப்புற அடையாளங்களை தொலைக்காமல் இருக்கும் வகையில், பயனுள்ளதாக அமைந்துள்ளது.

என்னதான் நகரங்கள் நமக்கு வாழத்தகுந்த இடமாக இருந்தாலும், இதுப்போன்ற அனைத்து கிராமங்களும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்