நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!

 நாசா விண்வெளிக்கு கழிப்பறைகளை அனுப்புகிறது. அதன் விலை $174 பில்லியன் அதாவது சுமார் 8700 கோடி ரூபாய்.


விண்வெளியில் நாசா கழிவறைகளை அமைக்க செய்யும்செலவுகளை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். விண்வெளியில் ஒரு கழிப்பறை கட்ட நாசா 14 மில்லியன் பவுண்டுகள் அல்லது 86,86,48,000 ரூபாய் செலவிடுகிறது.


புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்ட இந்த கழிப்பறை, சந்திரனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு நாசாவால் சோதனை செய்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. 


புதிய கழிப்பறையின் வடிவமைப்பு டைட்டானியம் வடிவமைப்பாகும், இது முதலில் வடிவமைக்கப்பட்ட கழிப்பறையை விட பெண்களுக்கு சிறந்ததாக இருக்கும். 


நாசா தயாரிக்கும் ஒரு விண்வெளி கழிப்பறையின் விலை  19 மில்லியன் டாலர் ஆகும். இந்த ஆண்டு, ஒரு புதிய கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனை வடிவமைப்பதற்காக செலவு  $234 அதாவது, ரூ .174 கோடி. இந்த கழிப்பறை நிலவுக்கு அனுப்பப்படுகிறது.   


இந்த கழிப்பறை ஏன் மிகவும் விலை உயர்ந்தது? என நீங்கள் கேட்கலாம். விண்வெளி கழிப்பறை வழக்கமான கழிப்பறை போல் இல்லை. இது ஒரு சூப்பர் கிளீனர் வாக்குவம் கிளீனர் போன்றது. 


இந்த கழிப்பறையில் மிகவும் விலையுயர்ந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளியில் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது.


ALSO READ:  விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பான்.. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் சாதனம்..

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்