நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனாவுடன் 2 முறை போராடி மீண்ட 90 வயது முதியவர்; வெற்றி ரகசியம் என்ன?

மராட்டிய மாநிலத்தை கொரோனா அரக்கன் சித்ரவதை செய்து வருகிறான். தினமும் மாநிலத்தில் ஏற்படும் அதிகப்படியான பாதிப்பு, உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது.
இருப்பினும் கொரோனா நோயில் இருந்து மீண்டுவர வயது ஒரு தடையில்லை என்பதை இங்குள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்த 90 வயது முதியவர் பாண்டுரங் ஆத்மராம் என்பவர் நிரூபித்து உள்ளார். 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளான அவர், இந்த கொடிய நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளார். உலகெங்கும் பலரை தனது கோரப்பசிக்கு இரையாக்கி வரும் கொரோனா நோய்க்கு எதிரான தனது போராட்டம் குறித்தும், நோயை வென்ற ரகசியம் குறித்தும் அவர் கூறியதாவது:-


நான் முதல்முறை நோய் தொற்றுக்கு ஆளானபோது நோயின் தீவிரம் குறைவாக இருந்தது. இருப்பினும் இரண்டாவது முறை மீண்டுவந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் எளிதில் போதை பழக்கத்திற்கு அடிமையாக விடுகிறார்கள். மேலும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வதில்லை. நான் தவறாமல் நடைப்பயிற்சி செல்கிறேன். மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு ெகாரோனாவில் இருந்து விடுபட பெரிதும் உதவியது. எனக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டபோதும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. என் உடல்நலம் மற்றும் உணவில் கவனத்தை செலுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், “பாண்டுரங் ஆத்மராம் மன ரீதியாக மிகவும் வலுவாக இருந்தார். இதுவே அவர் கொரோனாவை தோற்கடிக்க உதவியது” என்றார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!