நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்த உதவத் தயார்: கை கொடுக்க முன்வந்தது சீனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் மருத்துவமனைகளில் போதிய இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாடு என்று நாடே திக்குமுக்காடி வரும் நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவ சீனா முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று சீனா உறுதி அளித்துள்ளது. எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்திய-சீன உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது, மேலும் அந்தநாட்டு மொபைல் செயலிகள் பலவற்றை இந்தியா தடை செய்தது. இதனையடுத்தும் பெரிய உறவு விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் சீனாவின் அயலுறவு அமைச்சகம், இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையினால் ஏற்பட்டுள்ள ‘மோசமான, ஆபத்தான சூழ்நிலையை’ கருத்தில் கொள்வதாக கூறியுள்ளது., சீன அதிகாரப்பூர்வ ஊடகம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு உதவத் தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்துக்கே விரோதியாகும். இதற்கு பன்னாட்டு ஒற்றுமையும் பரஸ்பர உதவியுமே தீர்வு” என்று கூறினார்.

மேலும், “சீனா இப்போது இந்தியாவில் தொடரும் மோசமான, ஆபத்தான் சூழ்நிலையை சீனா கருத்தில் கொள்கிறது. அதாவது இந்தியாவில் தற்காலிகமாக பெருந்தொற்றுத் தடுப்பு மருத்துவ உபகரணங்கள், சப்ளைகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவுக்கு தேவையான உதவியை வழங்க நாங்கள் எழுந்து நின்று தயாராக இருக்கிறோம். இதன் மூலம், எங்கள் உதவி மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவ தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிய நீண்ட காலம் எடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உலகிலேயே அதிக கொரோனா தொற்று ஒரு நாளில் தாக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இறப்பும் நாளொன்றுக்கு 2,000த்தைக் கடந்து ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டு நிலவரங்கள் மெல்ல மெல்ல அரசின் முயற்சியினால் சரியாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!