நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆக்சிஜன் தேவையைக் குறைக்கும் இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி மருந்துக்கு இந்தியா அனுமதி

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தான விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தான விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக கொரோனா தாக்க்குதலுக்கு 20 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்படுவதால் குழந்தைகள் மருத்துவர்களும் திக்குமுக்காடிப் போயுள்ளனர், என்ன டோஸில் கொரோனா மருந்துகளைக் கொடுப்பது உள்ளிட்ட சிக்கல்களுக்கு விடையில்லை.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ளது.

விராபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆன்டிவைரலுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் நாள் 7 க்குள் ஆர்டி-பி.சி.ஆர்சோத்னையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது.

நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு மற்றும் தோல்வியை இந்த ஆன்டிவைரல் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைச் சீட்டுக்கு இந்த ஆல்பா இண்டெர்பெரான் 2பி எனப்படும் விராஃபின் மருத்துவமனைகளில் கிடைக்கும். கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் இந்தச் சிகிச்சையைக் கையாண்டால் வைரஸ் சுமை குறைவதாக அந்த நிறுவனம் ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது ஊசிமருந்து தசை வழியாகவும் நரம்பு வழியாகவும் செலுத்தக் கூடியது. கியூபாவில் வைரஸ் நோய் பரவலுக்கு இந்த மருந்துதான் கொடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்