நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டில் கொரோனா நோயாளிகள்: செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை எவை?

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருத்துவர்கள் அறிவுறுத்தும் சில வழிமுறைகளையும் பின்பற்றி வீட்டினுள் தொற்றுப் பரவுவதை தவிர்க்கலாம்.
கொரோனா தொற்று இந்தியாவில் உச்சமடைந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பானது 3 லட்சத்தை கடந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி இருந்தது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளிகளிடமிருந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவுதால், குடும்ப தொற்றுகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

இருப்பினும், வீடுகளில் கொரோனா நோயாளிகளை முழுமையாக தனிமைப்படுத்துவது இயலாத காரியம் என்றாலும், இதற்காக வருத்தப்பட தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருத்துவர்கள் அறிவுறுத்தும் சில வழிமுறைகளையும் பின்பற்றி வீட்டினுள் தொற்றுப் பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளை பராமரிப்பது குடும்பத்தாரோடு கடமையாக இருந்தாலும், தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதும் இன்றியமையாதது ஆகும்.

கொரோனா பாதித்தவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை :

அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எல்லா நேரங்களிலும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

நோயாளிகளின் துணிகளை குடும்ப உறுப்பினர்களின் துணிகளோடு சேர்த்து துவைக்க கூடாது. 

தனியாகவே துவைக்க வேண்டும். கொரோனா நோயாளிகளின் துணிகளை துவைக்கும் போது, கிருமிநாசினிகளை கட்டாயம் பயன்படுத்தவும்.

தனித்தனி குளியல் அறைகளுக்கு வசதி இல்லாது இருந்தால், அனைவரும் பயன்படுத்தும் குளியல் அறையை எப்போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
நோயாளிகள் பயன்படுத்திய மருத்துவப் பொருள்களை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும்.

நீங்கள் செய்ய கூடாதவை :

கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறையில், மற்றவர்கள் நுழையக் கூடாது. நேரடித் தொடர்பின் மூலம் கொரோனா பரவுவதை விட, காற்றின் வழியாக அதிகம் பரவுவதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தொற்றுக்கு உள்ளாகி குணமடையாத நோயாளிகள் வீட்டில் இருப்பின், அக்கம் பக்கத்தாருடன் தொடர்பில் இருக்காதீர்கள். இது, தொற்று மற்றவர்களுக்கும் பரவ வழி வகுக்கலாம்.

கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணிர் கொண்டு கழுவுங்கள். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியமாகிறது.

இந்த சூழல் நிலையானது அல்ல. மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த சூழலை கவலையில்லாமல் தன்னம்பிக்கையுடன் கடந்து செல்வோம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!