நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வயிறு எரியுது... இவ்வளவா வீணாக்குறோம்.. ஆண்டு தோறும் 93 கோடி டன் உணவு வீணாகுதாம்!

ஒரு பக்கம் விவசாயிகள் உணவு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக அவர்கள் பல வகையான போராட்டங்களையும் எதிர்கொண்டு வரும் அதே நேரத்தில் மறுபக்கம் அதிகளவிலான உணவுகள் வீணாக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மனிதனின் பொறுப்பில்லாதத்தனமும், அக்கறையின்மையுமே காரணம். உணவு வீணாக்கப்படுவது குறித்து ஐநா சபையின் ஆய்வுறிக்கை ஒன்று நேற்று வெளியானது.

அதில் ஒவ்வொரு தனி நபரும் சராசரியாக ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணடிக்கப்படுகிறதாம்.
17 சதவீத உணவு
இதில் பெரும்பாலான உணவு வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகளே. உலகம் முழுவதிலுமாக மொத்தம் 17 சதவீத உணவு யாருக்கும் பயனின்றி வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பில்லியன் மக்கள்
2019 ஆம் ஆண்டில் 931 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளன. சுமார் 3 பில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறக்க நேருடுகிறது.
கட்டுப்படுத்த வேண்டும்
மேலும் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் இது போன்று உணவு வீணாக்கபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஐநா உணவு பாதுக்காப்பு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில்
அமெரிக்காவில் ஒரு வீடானது ஆண்டுக்கு சராசரியாக 59 கிலோ உணவை வீணடிக்கிறதாம். சீனா இதை விட மோசம்.. அங்கு ஒரு வீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 64 கிலோ உணவை வீணடிக்கிறார்களாம். இனிவரும் நாட்களில் உணவு வீணாவதை தவிர்ப்போம் என்ற சபதத்தை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வோம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்