நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

93 ஆண்டுகள் பழமையான சரவிளக்கு சட்டத்தை மணமுடிக்க விரும்பும் பெண்: இங்கிலாந்தில் வினோதம்!

அமண்டா சுமார் 93 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெர்மன் சரவிளக்கிற்கு ‘லுமியர்’ என்ற பெயரை சூட்டி காதலித்து வருகிறாராம்.
காதல் என்பது ஒரு மர்மமான விஷயம். ஏனெனில் அது எப்போது யார்மீது ஏற்படும் என்றே தெரியாது. அதிலும், காதலுக்கு கண்ணில்லை என்ற பழமொழி பரவலாக கூறப்படுவதுண்டு. அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. ஏன்னென்றால், இங்கு ஒரு பெண் காதலிக்கும் பொருளுக்கு உயிர், உணர்வு என எதுவுமே இல்லை. சமீபகாலமாக அநேக வெளிநாட்டினர் செக்ஸ் டால்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட பல வேடிக்கை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதனை விஞ்சும் வகையில், பிரிட்டிஷ் பெண் ஒருவர் 93 ஆண்டுகள் பழமையான சரவிளக்கை காதலித்து அதனையே மணமுடிக்க உள்ளதாகவும் கூறிய சம்பவம் மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியை சேர்ந்த அமண்டா லிபர்ட்டி என்ற பெண் சமீபத்தில் சேனல் 4 இன் பகல்நேர நிகழ்ச்சியான ஸ்டெஃப்ஸ் பேக்டு லன்ச்சில் (Steph’s Packed Lunch) ஒரு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு சரவிளக்கை எப்படி காதலித்தார் என்பதை வெளிப்படுத்தினார். அமண்டா சுமார் 93 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெர்மன் சரவிளக்கிற்கு ‘லுமியர்’ என்ற பெயரை சூட்டி காதலித்து வருகிறாராம்.

மேலும் இந்த உயிரற்ற பொருளை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். அமண்டா அன்பின் ஒரு புதிய அம்சத்தை முன்வைத்து, தனக்கு ‘ஆப்ஜெக்டோபிலியா’ இருப்பதைப் பற்றி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆப்ஜெக்டோபிலியா என்பது ஒரு மனிதன் உயிரற்ற பொருள்களை நோக்கி காதல் மற்றும் காதல் உணர்வை வளர்க்கும் ஒரு நிலை ஆகும். இவரது கதை முதன்முதலில் 2019 இல் ஒளிபரப்பப்பட்டு மிகவும் வைரலாகியது.

சேனல்4 தொகுப்பாளர் ஸ்டெஃப் மெக் கோவரனுடன் பேசிய அமண்டா, சரவிளக்கை பெரும்பாலான மக்கள் பார்ப்பது போல, தான் அதை ஒரு உயிரற்ற பொருளாக பார்க்கவில்லை என்று கூறினார். மேலும், ஜப்பானில் மிகவும் பொதுவாக பேசப்படும் அனிமிசம் என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டார். அனிமிசம் என்பது ஒரு பொருளிலிருந்து மக்கள் ஆற்றலை உணருவது என்று அமண்டா விளக்கம் அளித்துள்ளார். தன்னை பொறுத்தவரை, சரவிளக்கு ஒரு சாதாரண பொருள் மட்டுமல்ல, அது ஒரு நபர் தெரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதை அவர் உணர்வதாகவும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

சரவிளக்கு மீதான தனது அன்பை வெளிப்படுத்திய அமண்டா, தான் அதை காதலிக்காத கணமே இல்லை என்று கூறினார். சரவிளக்கின் மீதான அமண்டாவின் காதல் ஒரு ஒளி விளக்கைப் போன்றது அல்ல. ஆனால் காலப்போக்கில் அதன் மீது ஏற்பட்ட ஒரு அன்பின் உணர்வு. பொருள்களின் மீதான தனது அன்பு குறித்து மேலும் விளக்கிய அமண்டா, " எனக்கு நீண்ட காலமாக இந்த உணர்வு புரியவில்லை. மிகவும் வித்தியாசமாக இருந்தது. வெகு காலம் கழித்து பொருள்களின் மீது இருக்கும் அன்பான உணர்வை புரிந்துகொண்ட பிறகு, நான் இப்படி இருப்பதையே ஏற்றுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தனது நிலையை விளக்கும் போராட்டம் இன்னும் நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் பொருள்களின் மீதான அவரது ஈர்ப்பைப் பற்றி அறிவியல் பூர்வமாக உறுதியான விளக்கங்கள் ஏதும் இல்லை. தொகுப்பாளர் ஸ்டெப்பிடம் பேசிய அமண்டா, இந்த உணர்வு சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கல்களும் இருந்தபோதிலும், தான் யார் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும், இதனால்தான் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். ஏனென்றால் என்னைப்போலவே மற்றவர்களும் தாங்கள் யார் என்பதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் இப்படி இருப்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதை விட முதலில் நமக்கு நாமே ஏற்றுக்கொள்வது அவசியம் என்று அமண்டா தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!