நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Bizarre challenges: 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி

 "10,000 டாலர் கொடுத்தால் பாம்புகளுடன் இருப்பீர்களா?” என்ற கேள்வியுடன் தொடங்கும் வீடியோவை 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர். 


"10,000 டாலர் கொடுத்தால் பாம்புகளுடன் இருப்பீர்களா?” என்ற கேள்வியுடன் தொடங்கும் வீடியோவை 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர். 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். பார்த்தவர்கள், உடனே வெறித்தனமாக பகிரும் வீடியோவாக மாறியுள்ளது இந்த பாம்புகளும், இளைஞனும் இருக்கும் வீடியோ.

இந்த பாம்பு ஸ்டண்டிற்குப் பிறகு, வீடியோவில் மேலும் பல விசித்திரமான சவால்களும் வருகின்றன. ஒரு பூச்சி உங்கள் மீது 30 விநாடிகள் ஊர்வது, கரப்பான் பூச்சிகளைக் கொண்ட ஒரு கொள்கலனில் இருந்து ரூபாய் நோட்டுகளைப் எடுப்பது, ஊறுகாய் நிறைந்த தொட்டியில் உட்கார்ந்து கொள்வது என விசித்திரமான சவால்களுடன் இந்த வீடியோ நிறைந்திருக்கிறது.

பார்த்தால் படையும் நடுங்கும் பாம்புடன் இருப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது என்றால், இந்த வீடியோவில் காணப்படும் இளைஞனோ, வண்ணமயமான பல பாம்புகளுடன் ஒரு தொட்டியில் உட்கார்ந்திருக்கிறார்.


அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தால் போதும் என்று இந்த சவாலை ஏற்றுக் கொண்டு, சவாலை சமாளிக்கவும் செய்கிறார். பார்ப்பவர்களின் வயிற்றில் தான் புளி கரைக்கிறது. 

தைரியமான இளைஞர்களை தேடிப் பிடித்து இப்படி பல சவால்களை செய்ய வைக்கிறது யூடியூப் சேனல். பிரபல யூடியூப் சேனலான மிஸ்டர் பீஸ்ட் வெளியிட்ட இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் வினோதமான சவால்களை முடித்த அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்குகிறார். இருப்பினும், வைரலாகிவிட்ட இந்த 14 நிமிட வீடியோ கிளிப் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  

ஏப்ரல் 11 அன்று வெளியிடப்பட்ட இந்த யூடியூப் வீடியோவில், 22 வயதான யூடியூபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர், தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு பணப் பரிசை வெல்ல தொடர்ச்சியான வினோதமான போட்டிகளை எதிர்கொண்டார்.  


பாம்புகள் நிறைந்த தொட்டியில் உட்கார ஒப்புக்கொண்டால், 10,000 டாலர் (சுமார் ரூ. 7.5 லட்சம்) தருவதாக அவர் தனது மூன்று நண்பர்களைக் கேட்டார். அவர்களில் இருவர் சவாலை முயற்சிக்க மறுக்கையில், மூன்றாவது நபர் அதை முயற்சித்து $ 10,000 ஐ மிகவும் தைரியமாகவும் எளிதாகவும் வென்றான்.


ALSO READ :  Maggie Laddu: இணையத்தில் செம trend ஆகி கமெண்டுகளையும் லைக்குகளையும் அள்ளும் மேகி லட்டு


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்