தடுப்பூசி போடாமல் இருக்கலாம் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நீங்கள் எந்த சூழ்நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே தடுப்பூசி பெற்ற நிலையில், மீதமுள்ளவர்கள் தங்களுக்கான தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும், தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் அவை வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் குறித்த கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில் தெரியவில்லை.
COVID-19 தடுப்பூசியிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இது தொடர்பாக சில விளக்கங்களை தந்துள்ளது. தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து தெரிவித்து கொள்வதற்கு முன்பு நாம் அதனை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை காட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமா?
தற்போது பரவி வரும் வைரஸ் இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு வேறு எந்த உடல் நல பிரச்சனைகளும் இதற்கு முன்பு ஏற்படவில்லை என்பதனால் தடுப்பூசி போடாமல் இருக்கலாம் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நீங்கள் எந்த சூழ்நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
COVID-19 தடுப்பூசி வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறதா?
COVID-19 தடுப்பூசிகள் SARs-COV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக நமது உடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன. இது கொடிய நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பிக்கிறது மற்றும் எதிர்காலத்திற்கு நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இருப்பினும், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் ஒரு புதிய வகை பரவி வரும் சூழலில் தடுப்பூசிகள் வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலத்திற்குப் பிறகு ஒரு நபர் எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார் என்பதை தீர்மானிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஆய்வில் வெளியான தகவல்:
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) புதிய அறிக்கையின்படி சுமார் 4,000 தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார வல்லுநர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் தரவுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவால் உருவாக்கப்பட்ட மெசஞ்சர் ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்ட பிறகு 80 சதவீத பேருக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், இரண்டாவது டோஸுக்குப் பிறகு 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கூடுதலாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் மூலம் மற்றவர்களுக்கு COVID-19 பரவும் அபாயத்தை தடுப்பூசிகள் குறைப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக CDC வெளியிட்ட அறிக்கையில், “நோய்த்தொற்று உள்ளவர்களிடமோ அல்லது அறிகுறிகள் தோன்றுவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே ஒருவரிடம் இருந்து பரவக்கூடிய தொற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக நோயாளிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், முதலுதவி மற்றும் பிற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளின் 3 ஆம் கட்ட சோதனையில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் குறைந்தது 6 மாதங்களாவது நோய் எதிர்ப்பு சக்தி பரவலாக இருப்பதை தெரிவித்தனர். சி.டி.சி பட்டியலிட்டுள்ள வியாதிகளுக்கு எதிராக இந்த தடுப்பூசி 100% பயனுள்ளதாகவும், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) குறிப்பிடும் கடுமையான கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 95.3% பயனுள்ளதாகவும் இருப்பதாக கண்டறிந்துள்ளது. அதோடு, B.1.351 எனப்படும் தென்னாப்பிரிக்க மாறுபாட்டிற்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனாவின் புதிய வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா?
இது தொடர்பாக தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (NIAI) நடத்திய ஆய்வில், புதிய கோவிட் வகைகளுக்கு எதிராக கோவிட் தடுப்பூசிகள் நம்மை பாதுகாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. NIAID ஊழியரான விஞ்ஞானி ஆண்ட்ரூ ரெட் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், SARs-COV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட 30 பேரின் வெள்ளை இரத்த அணுக்களின் மாதிரிகளை மதிப்பீடு செய்தது. இந்த வெள்ளை அணுக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மாறுபாடுகள் தோன்றுவதற்கு முன்னர் நோயாளிகளில் இருந்து மீட்கப்பட்டது. அதில் உள்ள T-செல்கள் வைரஸுக்கு எதிராக செயலில் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அதன் ரெஸ்பான்ஸ்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தன.
மேலும், நிபுணர்களின் கூற்றுப்படி, ஆய்வு செய்யப்பட்ட வகைகளில் உள்ள அனைத்து பிறழ்வுகளையும் கிட்டத்தட்ட அடையாளம் காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக NIAID தனது செய்திக்குறிப்பில் கூறியதாவது, "இது பற்றி பெரிய ஆய்வுகள் தேவைப்படும் அதே நேரத்தில், ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் மூலம் சுறுசுறுப்பான நபர்களில் Tசெல்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் தடுப்பூசிகளின் உதவியால், மூன்று கொரோனா வகைகளில் காணப்படும் பிறழ்வுகள் காரணமாக பெரும்பாலும் மக்கள் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளன. மேலும், வளர்ந்து வரும் வகைகளுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.தடுப்பூசிக்கு பிறகும் முகக்கவசம் அணிய வேண்டுமா?
தற்போதைய கட்டத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் COVID தடுப்பூசிகளை நாம் முழுமையாக நம்ப முடியாது. எனவே, நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசங்களை தொடர்ந்து அணிந்துகொள்வதும், சமூக தூரத்தை கடைப்பிடிப்பதும் முக்கியம்.
Comments
Post a Comment