நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூண்டு, மிளகு, தேங்காய்ப் பால்… இம்யூனிட்டிக்கு உதவும் சூப்பர் சூப்!

பருவகால காய்கறிகளில் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மிகவும் நல்லது.
மழைக்காலத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் மாற்றும் சூடான பானங்களை விட சிறந்தது என்ன? நோய்த்தொற்று பரவும் இந்த நேரத்தில், நம்மில் பலர் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை முயற்சி செய்து வருகிறோம். அந்த வரிசையில், பருவகால காய்கறிகளில் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மிகவும் நல்லது. ஆயுர்வேத செஃப் அமிர்தா கவுர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட இந்த எளிதான சூப் தயாரிப்பை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்கவேண்டும். சுவையோடு ஆரோக்கியமும் கிடைக்கும்.

தேங்காய்ப் பாலுடன் மிளகு சூப்’

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

பூண்டு – 3-4

உங்களுக்கு விருப்பமான ஃப்ரெஷ் கீரை வகை

சுட்ட பெல் கேப்ஸிகம் – 2

உப்பு மற்றும் மிளகு தூள் – தேவைக்கேற்ப

வால்நட்ஸ் – 2-3

தேங்காய்ப் பால் – சிறிதளவு

வெல்லம் – 1 டீஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் – ஒரு சிட்டிகை


செய்முறை

* வெங்காயத்தை முதலில் வதக்கவும். அதில் பூண்டு, ஃப்ரெஷ் கீரைகளையும் சேர்க்கவும்.

* வெங்காயம் கேரமல் ஆனதும், சுட்ட கேப்ஸிகம் சேர்க்கவும்.

* அதனோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ளவும்.

* அடுப்பை அணைத்து இந்தக் கலவையைக் குளிர்விக்கவும்.

* வறுக்கப்பட்ட வால்நட்ஸ், காய்கறிகள் வடித்த தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.

* இந்தக் கலவையை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

* இப்போது, ஒரு சில ஸ்பூன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்துவிடவும்.

* கூடுதலாகக் கருப்பு மிளகுத்தூள், ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

* அவ்வளவுதான்.. சூப் ரெடி!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்