நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அறிவியலின் உச்சம்.. செவ்வாய் கிரகத்தில் 'ஆக்சிஜன்' - சாதித்துக் காட்டிய நாசா

அமெரிக்கா: 'அப்படிப்போடு' சம்பவம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. என்னன்னு கேட்குறீங்களா? அப்படியே செய்திக்குள்ள வாங்க.

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள, அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தனது கால்களை பதித்தது.

சுமார் 293 மில்லியன் மைல்கள் என்ற மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) கடந்த பிப்ரவரி 18-ம் தேதி பெர்ஸிவியரன்ஸ் ரோவர் தரையிறங்கியது.
CO2 'டூ' O
இந்த நிலையில், நாசாவின் ரோவர் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. அதன், ஆறு சக்கர ரோபோ செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து சில கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது. பூமி அல்லாது வேறொரு கிரகத்தில், கார்பன் டை ஆக்சைடு ஆக்சிஜனாக மாற்றப்படுவது இதுவே முதன்முறை நடந்தது என்று நாசா புதன்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய முயற்சி
"இது செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாகும்" என்று நாசாவின் விண்வெளி தொழில்நுட்ப பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி ஜிம் ரியூட்டர் கூறியுள்ளார். இந்த புதிய முயற்சியானது எதிர்கால மனித ஆய்வுக்கு வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை மூலம், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், மற்ற கிரகத்திலிருந்து ராக்கெட் பூமிக்கு திரும்பும் போது, அதன் உந்துசக்தியாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்ராசக்க!.
10 நிமிட சுவாசம்
மார்ஸ் ஆக்ஸிஜன் In-Situ Resource Utilization சோதனை - அல்லது MOXIE என்பது ஒரு கார் பேட்டரியின் அளவுள்ள ஒரு பெட்டியாகும். இது ரோவரின் முன்பகுதியில் வலது பக்கத்திற்குள் அமைந்துள்ளது. (நம்மாளு தான் ஆக்சிஜனா மாத்துற வேலையை பாக்குறாப்ல). இது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரிக்க மின்சாரம் மற்றும் வேதியியலைப் பயன்படுத்துகிறது, அவை ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனவை. இது கார்பன் மோனாக்சைடை ஒரு துணை உற்பத்தியாகவும் உருவாக்குகிறது. முதல் ஓட்டத்தில், MOXIE 5 கிராம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது. இது ஒரு விண்வெளி வீரருக்கு சுமார் 10 நிமிட சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனுக்கு சமம். MOXIE இன் பொறியாளர்கள் இப்போது அதிக சோதனைகளை மேற்கொண்டு அதன் வெளியீட்டை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்கள். இது ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
25 டன் ஆக்சிஜன்
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வடிவமைக்கப்பட்ட மோக்ஸி, நிக்கல் அலாய் போன்ற வெப்ப-எதிர்ப்பு பொருட்களால் உருவாக்கப்பட்டது, மேலும் இது இயங்குவதற்குத் தேவையான 1,470 டிகிரி பாரன்ஹீட் (800 செல்சியஸ்) வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்ஐடி பொறியாளர் மைக்கேல் ஹெக்ட் கூறுகையில், MOXIE-ன் ஒரு டன் வெர்ஷன் மூலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு ராக்கெட்டுக்கு தேவையான சுமார் 55,000 பவுண்டுகள் (25 டன்) ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்' என்றார்.

மனிதன் சுவாசிக்க தேவை ஆக்சிஜன். அதையே மற்ற கிரகங்களில் உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம். எப்படியும் ஒரு 30 ஆண்டுகளில், மற்ற இடங்களில் பிளாட்கள் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!