ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாய்களுக்கான ஏலத்தில் பங்கேற்ற ஒரு நாய் 35,200 ஆஸ்திரேலிய டாலர்கள் விற்கப்பட்டுள்ளது.
பழைய மற்றும் மதிப்புமிக்க பொருட்களை ஏலத்தின் மூலம் மக்கள் வாங்கி விற்கிறார்கள். ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களின் விலை அவற்றின் அடிப்படை விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் ஏலத்தில் ஒரு நாய் சுமார் ரூ.19 லட்சம் விலையில் வாங்கப்பட்ட சம்பவம் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாய்களுக்கான ஏலத்தில் பங்கேற்ற ஒரு நாய் 35,200 ஆஸ்திரேலிய டாலர்கள் (ரூ.19,89,152) விற்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்பார்ப்பையும் தாண்டி, ஒரு நாயின் மிக உயர்ந்த விலையின் முந்தைய தேசிய சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. ஹூவர் என்ற பெயருடைய இந்த ஆஸ்திரேலியன் கெல்பி நாய் இப்போது ஆஸ்திரேலியாவில் மிகவும் விலையுயர்ந்த வேலை செய்யும் நாய் (costliest working dog) என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் சமீபத்தில் நாய்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம் நிகழ்வில் பங்கு பெற்ற நாய் ஒன்று ரூ.19 லட்சத்திற்கு விற்கப்பட்டு முந்தைய சாதனைகளை முறியடித்து உள்ளது. விக்டோரியாவில் நடந்த Australian Premier Working Dog Auction நிகழ்வில் 27,090 டாலர் (ரூ. 19,85,967) என்ற சாதனை விலையில் ஆஸ்திரேலிய கெல்பி இனத்தை சேர்ந்த அந்த குறிப்பிட்ட நாய் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய ஆட்டு நாய் என்றும் இந்த ஆஸ்திரேலியன் கெல்பி ரக நாய்கள் குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இது கால்நடைகளுடன் வேலை செய்ய சிறப்பான பயிற்சி பெற்ற நாய் இனமாக இருக்கிறது. இந்த உழைக்கும் நாய்கள் செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை சேகரிக்க மற்றும் மேய்க்க பயன்படுத்தப்படுகின்றன.
ரூ.19 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ள ஹூவர் நாயானது, சாரா மற்றும் அவரது கணவர் டேவிட் லீ ஆகியோருக்கு சொந்தமானது. இந்த கெல்பி நாய் பிறந்து 4 மாதங்கள் ஆகி இருந்த போது ஒரு நண்பரிடமிருந்து அதை இவர்கள் வாங்கினர். இங்கிலாந்தை சேர்ந்த சாரா ஆஸ்திரேலியாவில் தனது கணவர் லீயுடன் விக்டோரியாவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிக அதிக விலைக்கு ஏழாம் எடுக்கப்பட்டுள்ள ஹூவர் பற்றி பேசிய சாரா, ஹூவர் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்தது என்று கூறினார். கெல்பி ரக நாய்களின் சிறப்பு திறன்கள் பற்றி தாங்கள் நன்கு அறிந்திருப்பதாவும், தங்களிடமிருந்து இப்போது வேறு ஒரு நல்ல பராமரிப்பாளரிடம் செல்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறி உள்ளார்.
ஹூவர் மிக பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் இதுநாள் வரை அவர்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய பகுதியாக இருந்த ஹூவரை பிரிவது வருத்தமளிக்கும் தருணம் என்று குறிப்பிட்டார். ஹூவர் முந்தைய 2019-ல் நிகழ்த்தப்பட்ட தேசிய சாதனையை முறியடித்தார். அந்த ஆண்டு மற்றொரு கெல்பி ரக நாய் இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,10, 484-க்கு விற்கப்பட்டது. இருப்பினும் உலகளவில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த working dog-ல் இங்கிலாந்தை சேர்ந்த border Collie ரக நாய் உள்ளது. கிம் என்ற பெயரை கொண்ட இந்த நாய் கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் ஏலத்தின் மூலம் 27,000 யூரோக்கள் (ரூ. 24,000,30) விலையில் விற்கப்பட்டது.
Comments
Post a Comment