நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலும்.. கற்பும்.. விசித்திர உயிரினங்களும்..

ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே காதல், கற்பு, காமம் போன்றவை உண்டு என்றும், மற்ற உயிரினங்களுக்கு அதெல்லாம் கிடையாது என்றும் பொதுவாக கருதுகிறோம். ஆண்-பெண் என்ற உயர்வு தாழ்வு, ஆணாதிக்கம், எதிர்ப்பால் ஈர்ப்பு, ஆளுமை இதெல்லாம் மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கின்றன. அதில் பல சுவாரசியங்களும் கலந்திருக்கின்றன.
கரையான்: 
தன்னுடைய உடல் பலத்தைக் காட்டி பெண் கரையானை ஈர்க்கும் குணம் ஆண் கரையான்களுக்கு உண்டு. அவை ஒன்றுடன் ஒன்று யுத்தம் புரிந்து ஜெயித்து பெண் கரையானை அழைத்துச் செல்கின்றன. இப்படி பெண் 
கரையானுக்காக இரண்டு ஆண் கரையான்கள் சண்டையிடுவதை மற்ற கரையான்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும். இந்த வீரப் போரில் ஏதேனும் ஒன்று மரணமடையும் வரை சண்டை நீடிக்கும். சுற்றியிருக்கும் கரையான்கள் சத்தம் எழுப்பி அவற்றை உற்சாகப்படுத்தும். வெற்றி பெற்ற கரையானுக்கு மட்டும்தான் அந்தப் பெண் கரையானிடம் முழு உரிமை உள்ளது. பின்பு மற்ற கரையான்கள் புடைசூழ அந்தப் பெண் கரையானை தன் இருப்பிடத்துக்கு ஆண் கரையான் அழைத்துச் செல்லும்.

யானை: 
தனக்குப் பிடிக்காத ஆண் யானை தன்னைப் பின்தொடர்ந்து வருமானால் பெண் யானை ஒருவித சத்தத்தை எழுப்பி தன் குழுவைக் கூட்டிவிடும். அந்த பெண் யானையின் துணை அந்த கூட்டத்தில் இருந்தால் அவ்வளவுதான், புதிய ஆண் யானையை விடாமல் துரத்திச் சென்று முழு பலத்துடன் மோதிச் சண்டையிடும். மற்ற யானைகள் சண்டையை வேடிக்கை மட்டுமே பார்க்குமே தவிர, குறுக்கே வராது. ஆண் யானையோடு ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டாலும் பெண் யானை விலகிப் போய்விடும். தேடி வந்து தொல்லை செய்தால், பலமாகப் பிளிறி தன் குழுவைக் கூட்டும். அந்த கூட்டத் தைப் பார்த்தவுடன் ஆண் யானை அமைதியாக திரும்பிப் போய்விடும்.

பல்லி: 
ஆண் காட்டுப் பல்லிகள் பார்க்க டிராகன் போல இருக்கும். இவை பெண் பல்லிக்காக சண்டை போடும். ஒன்றை ஒன்று கடித்துக் கொள்ளும். விடாமல் ஓடித் துரத்திப் பிடிக்கும். எதிரி பல்லியின் வாலைக் கவ்விப் பிடிக்க 
முயற்சிக்கும். சிக்காமல் ஓடும் பல்லி சமயம் பார்த்து வாலால் முகத்தில் அடிக்கும். தடுமாறி விழும் பல்லியை தொடர்ந்து சென்று பிடித்து இழுக்கும். ஒன்றோடொன்று கட்டிப் புரளும். நெடுநேரம் நீடிக்கும் இந்தச் சண்டையில் வாலைப் பிடிக்கும் பல்லி தோற்றதாகக் கருதப்படும். வெற்றியடைந்த பல்லி தன் நீண்ட நாக்கால் பெண் பல்லியை தடவிக் கொடுக்கும். பிறகு தன்னோடு அழைத்துச் சென்றுவிடும். பல்லிதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நம்ம ஊர் ரேக்ளா ரேஸ் போல காடு முழுவதும் அப்போது புழுதி பறக்கும். பாலைவனங்களிலும் இந்த வகைப் பல்லிகள் உண்டு.

கழுகு: 
ஒருமுறை ஜோடி சேர்ந்த கழுகுகள் கடைசி வரை இணை பிரி யாது. எங்கே சென்றாலும் ஒன்றாகவே செல்லும். எவ்வளவு தூரம் பறந்தாலும் ஒன்றாகவே பறக்கும். அதுவே அதன் இனத்தினிடையே அவற்றுக்கு மரி யாதை. சந்தர்ப்பவசத்தால் பெண் கழுகு கற்பு நிலை தவறினால் அதற்கு மரண தண்டனைதான். கூட்டத்தில் உள்ள எல்லா கழுகுகளும் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட பெண் கழுகை கொத்திக் குதறிவிடும். அதைப் பார்க்கும் மற்ற கழுகுகள் காலம் முழுவதும் கற்பு நிலை மாறாமல் வாழ்ந்து மடியும்.

அணில்: 
பெண் அணில்கள் ஆண் அணில்களின் அழகான வாலைக் கண்டு மயங்கிவிடும். அவற்றின் பின்னே வெகுதூரம் போய்விடும். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பின் வாலின் அழகு குறையத் தொடங்கும். அப்போது வேறு அழகான வால் கொண்ட அணில் பின்னால் அந்தப் பெண் அணில் போய்விடும். ஆண் அணிலுக்கு பெண் அணிலைப் பாதுகாப்பதே பெரும்பாடு. அதனால் கொஞ்சம் நேரம்கூட தனியே விடாது. எங்கே போனாலும் துரத்திக் கொண்டே பின்னால் ஓடும்.

சிங்கம்: 
தன்மானத்துக்குப் பெயர் போனது சிங்கம். தனக்கு பிரியமான ஜோடி கிடைக்கும்வரை தனித்து வாழும். பிடித்த ஜோடி கிடைத்தவுடன் பிள்ளை குட்டிகள் என்று குடும்பமாக வாழும். போட்டியாக வேறு ஆண் சிங்கம் வர முடியாது. ஒரு ஆண்- பெண் சிங்கத்தை கூண்டில் பிடித்துப் போட்டாலும் தனித் தனியாகத்தான் இருக்கும். மனதுக்குப் பிடித்தால் மட்டுமே ஜோடி சேரும். அதனால்தான் வனவிலங்குச் சரணாலயத்தில் சிங்கக்குட்டிகள் பிறப்பது அரிது. காடுகளில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிங்கக் குட்டிகளைப் பார்க்கலாம். சில சிங்கங்கள் தக்க ஜோடி கிடைக்காவிட்டால் ஆயுட்காலம் முழுவதும் கூட தனியாக வாழும்.

சலானமன்டர்: 
கருப்பு-சிவப்பு கலந்த இந்த இன ஆண் பறவை தனக்குத் துணை யாக ஒரு கற்புக்கரசியைத் தேடும். ஒரு சில அங்க அடையாளங்களை வைத்து இது கன்னிப் பெண் குருவிதான் என்பதைத் தீர்மானிக்கும். பிறகு ஜோடி 
சேர்த்துக்கொள்ளும். தன் துணை தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். அப்படி ஒரு வேளை தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு குருவியுடன் நட்புக் கொண்டிருந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடும். வேற்றுக் 
குருவியின் வாசனையை முகர்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ளும். அதன் பிறகு பெண்குருவிக்குக் கிடைக்கும் தண்டனை கடுமையானது. ஆண் குருவி தன் அலகால் கொத்திக் கொத்தி சித்திரவதை செய்யும். பெண் குருவி உடல் புண்ணாகி உயிரை விடும் வரை விடாமல் கொத்தும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!