நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாடியும்.. கொரோனாவும்..

ஊரடங்கு காலத்தில் சலூன்கள் சில மாதங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் நிறைய பேர் தாடி வளர்க்க தொடங்கிவிட்டார்கள். வளர்த்த தாடியை எடுப்பதற்கு மனமில்லாமல் அதனையே பேஷனாக பின்பற்றவும் செய்கிறார்கள்.
ஆண்களுக்கு தாடி அழகு தரும் என்றாலும் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் முகம் சுகாதாரம் அற்றதாகி விடும்.தற்போதைய சூழ்நிலையில் தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எவ்வளவு நீளமாக தாடி வளர்க்கிறீர்களோ அந்த அளவுக்கு அழுக்குகள், கிருமிகள் தாடியில் சேர்ந்திருக்கும். முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் தாடி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது. ஏனெனில், ‘அடர்த்தியான தாடி, மீசை வைத்திருந்தால் அவை முக கவசம் அணிவதற்கு இடையூறாக மாறக்கூடும். அது கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாகிவிடும்.

‘தாடி மற்றும் மீசையின் வெவ்வேறு தோற்ற பாணிகள் வைரஸை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்’ என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பாதுகாப்புக்காக அணியும் முக கவசத்தை கொண்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளை மறைப்பதற்கு தாடி சவால் நிறைந்ததாக இருப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“முகத்தில் தாடி எதுவும் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக முடி இருந்தாலோ மூக்கு, வாய் போன்ற பகுதிகளை முக கவசம் கொண்டு பாதுகாப்பாக மூடிவிடலாம். ஆனால் தாடி அதிகமாக இருந்தால் முக கவசத்திற்கு இடைவெளியை உண்டாக்கி விடும். அதன் வழியாக வைரஸ் எளிதில் நுழைந்து தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் தாடியை சேவிங் செய்துவிடுவதுதான் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் கண்டிப்பாக டிரிம் செய்ய வேண்டும்” என்று அமெரிக் காவின் நோய் கட்டுப்பாடு மற் றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்