பங்களா இருக்கணும்.. சமைக்க தெரியணும்..அப்புறம் 20 ஏக்கர்ல ஃபார்ம் ஹவுஸ் வச்சிருக்கனும் - வைரலாகும் மணமகன் தேவை விளம்பரம்!
- Get link
- X
- Other Apps
பங்களாவுடன் மணமகன் கேட்டு செய்தித்தாளில் வெளியான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சொந்தம், பந்தம் எனப் பெரிய பட்டாளத்துடன் பெண் பார்க்கச் சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது இணையதளங்கள், செய்திதாள்களில் வரன்களை தேடிப் பிடிப்பதுதான் ட்ரெண்டாக உள்ளது. கிராமம், நகரம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இதன் மூலம் வரன் பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர். இதன் விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கை, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதும் கணிசமாக அதிகரித்துவிட்டன. அதில் தங்களுக்கு தேவையான வரன், விருப்பத்திற்கு ஏற்றவாறு வரன்களை தேர்வு செய்யலாம் என்பதால் ஏராளமானோர் இதனை விரும்புகின்றனர். இதில் மணமகன் மற்றும் மணமகள் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வரன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிட்டிருப்பார்கள்.
அப்படி சிலர் குறிப்பிடும் விஷயங்கள் மிகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு மணமகன் தேவை என ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்த விளம்பரமானது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் "பெண்ணியவாதியான, தலைமுடியை குறைவாக வெட்டி மேல் காதில் தோடு போட்ட 30 வயதான, நன்று படித்து தற்போது முதலாளித்துவத்திற்கு எதிரான பணியாற்றி வரும் பெண்ணிற்கு மணமகன் தேவை, மணமகன் 25-28 வயதிற்குள் இருக்க வேண்டும். பார்க்க ஹேண்ட்சம்மாக, நல்ல உடற்கட்டுடனும், ஒரு நல்ல பிஸ்னஸ் மற்றும் பங்களாவுடன் குறைந்தபட்சம் 20 ஏக்கர் நிலம் உள்ள ஆள் தேவை. கண்டிப்பாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது. மேலும் விருப்பமான நபர்கள் தங்கள் விவரங்கள் மற்றும் கருத்துக்களை curbyourpatriarchy@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இது ட்ரோல் விளம்பரமாக இருக்க கூடும் என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். சிலர் அந்த பெண்ணை "நயவஞ்சகர்" என்று அழைத்தனர், ஏனெனில் அவர் "முதலாளித்துவ எதிர்ப்பு என குறிப்பிட்டுள்ளார் . ஆனால் பணக்கார கணவரை விரும்புகிறார்" என கூறியிருந்தனர். மற்றொருவர் அவருக்கு வயது 30 ஆனால் 25-28 வயதுடைய ஒரு ஆண் வேண்டும் என விரும்புகிறாள்" என்பதால் அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்றும், சிலர் "உங்கள் சொந்த பணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் " என்றும் அறிவுறுத்தினர்.
இந்த விளம்பரத்தின் உண்மை தன்மையை அறிய முயற்சிக்கையில் இது ஒரு விளையாட்டு தனமான பொய்யான விளம்பரம் என தெரியவந்தது. தன் பெயரை வெளியிட விருப்பாத ஒரு பெண் கூறியதாவது 30 வயதை எட்டுவது ஒரு மைல்கல், குறிப்பாக நீங்கள் 30 வயதாகும்போது, உங்கள் குடும்பமும், சமூகமும் திருமணம் செய்துகொண்டு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகின்றன. அப்படி கொடுக்கும் வகையில் என் பிறந்தநாளுக்காக என் நண்பர்கள் செய்த பிராங்க் தான் இந்த விளம்பரம். எனது 30வது பிறந்தநாள் சமீபத்தில் வந்தது, அதற்காக இந்த விளம்பரத்தை என் நண்பர்கள் பேப்பரில் கொடுத்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மற்றும் அந்த செய்தித்தாளை எனக்கு பரிசாக அளித்தனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment